நாத்தாண்டி, மரந்த பகுதியில் வீட்டுக் கோழிப் பண்ணையில் வளர்ந்த கோழியொன்று பச்சை நிற முட்டைகளை இட்டுள்ளது. இதுவரை காலமும் சாதாரணமாக வெள்ளை நிற முட்டைகளை இட்டுவந்த இக் கோழி, முதன் முறையாக பச்சை நிறத்திலான 4 முட்டைகளை இட்டுள்ளது.
தனது பண்ணையில் வேறு கோழிகள் இவ்வாறு மாற்று நிற முட்டைகளை இட்டதில்லை என்றும் அதன் உரிமையாளர் எச்.பீ. சச்சின் கூறுகின்றார்.
நிறப் பதார்த்தங்களில் ஏற்படும் கோளாறு அல்லது மாற்றங்களினால் முட்டையின் தோடு வெள்ளை அல்லாத வேறு நிறங்களைப் பெறக்கூடும் என உயிரியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நன்றி - The Puttalam Times -





0 Comments