Subscribe Us

சின்னப்பாலமுனை கிராமத்திற்கு உலக உணவு திட்டத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.(PHOTOS)

பி. முஹாஜிரீன்


அம்பாறை மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கூடுதலாக பாதிக்கப்பட்ட சின்னப்பாலமுனை கிராமத்திற்கு உலக உணவு திட்டத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ் உலர் உணவுப் பொருட்களின் விநியோகம் இன்று (23) திங்கட்கிழமை கிராம சேவை உத்தியோகத்தர். ஏ. பர்வின் தலைமையில் நடைபெற்றது.

அரிசி, பருப்பு, தேங்காய்எண்ணெய் போன்ற உலர் உணவுப் பொருட்கள் 411 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. பர்வின் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். முனாபீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments