பைஷல் இஸ்மாயில் –
நேற்று முன்தினம் பொத்துவில் தகரம்பல காட்டுக்குள் காணாமல் போன நபர் இன்று (23) மாலை 4.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை – 2 ஆம் பிரிவியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் றஹீம் (வயது 42) என்பர் நேற்று முன்தினம் பொத்துவில் தகரம்பல காட்டுக்குள் காணாமல் போன நபர் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கொண்ட முயற்சியினால் இன்று (23) மாலை 4.00 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டார்.
இச்சம்ப இடத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நேற்று (22) காலை உடனடி விஜயத்தை மேற்கொண்டு பொத்துவில் பொலிஸாருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்களுடன் இணைந்து பொத்துவில் தகரம்பல மற்றும் உடும்பங்குளம் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இரண்டு நாற்களாக மேற்கொள்ளப்பட்டபோது இன்று (23) மாலை பொத்துவில் தகரம்பல உடும்பங்குள காட்டு மலைப் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார்



0 Comments