Subscribe Us

header ads

Lunch With satchin! சச்சினோடு விருந்துண்ண ரூ.1.5 லட்சம் கட்டணம்: சிட்னி உணவகம் சிறப்பு ஏற்பாடு

சச்சினோடு விருந்துண்ண ரூ.1.5 லட்சம் கட்டணம்: சிட்னி உணவகம் சிறப்பு ஏற்பாடு

இந்திய கிரிக்கெட் உலகின் கம்பீரமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கருடன் ஒரு 'வி.ஐ.பி. டின்னர்' நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர உணவகம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 26ந் தேதி நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் அவருடன் சுமார் 60 பேர் மட்டும் அமர்ந்து விருந்து உண்ணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருந்துக்கு இன்னும் சில இடங்களே காலியாக உள்ளதாக அறிவித்துள்ள அந்த உணவகம் இதற்கான நுழைவு கட்டணம் 1500-3000 ஆஸ்திரேலிய டாலர்கள் (ஒரு ஆஸ்திரேலிய டாலரின் இந்திய மதிப்பு சுமார் 48 ரூபாய் 50 பைசா) என நிர்ணயித்துள்ளது.

Post a Comment

0 Comments