கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட இலங்கை தாய்த் திருநாட்டின் 67வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வு 2015.02.04ஆந் திகதி புதன்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் KCDA யின் ஆலோசகரான ஜனாப். ஐ.எம். றிஸ்வின் அவர்களின் தலைமையில் காலை 07.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வு சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மதங்களை பிரதிபளிக்கும் மதகுருமார்களின் பங்குபற்றுதலுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி எம்.எம்.எஸ். அமீர் அலி மற்றும் கௌரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளரும், KCDA யின் ஆலோசகருமான கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் ஏனைய அதிதிகளாக பிரதி தவிசாளர் கௌரவ ஏ.எம். நௌபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.எம்.எம். ருவைத், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய பிரதி அதிபரும், KCDA யின் தலைவருமான ஜனாப். ஏ.எம். அன்வர், உபதலைவர் ஜனாப். ஏ.எம்.எம். முர்ஸிதீன், செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிரதம அதிதி அவர்களால் தேசிய கொடியினை ஏற்றி இவ்விழா ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மதகுருமார்களினால் ஆசியுரையும் வழங்கப்பட்டது.
தகவல்
ஊடகப்பிரிவு
KCDA










0 Comments