Subscribe Us

header ads

புத்தளத்தில் செல்லாக் காசாயப்ப்போன சுதந்திர தினம்



”மாணவர் இல்லையே சுதந்திர தினம் என்றும் ஒன்று இல்லை” இப்படி யொரு நிலை இலங்கைத் திருநாட்டின் 67 வது சுதந்திர தினத்தில் புத்தளம் நகரில்
உருவாகியுள்ளது.

நினைவுகளுக்கு எட்டிய நாள் முதல் ஆண்டு தோறும் சுதந்திர தின வைபங்களைக் கண்டு வந்துள்ள புத்தளம் நகர சமுகம் இவ்வாண்டு சுதந்திர
தினத்தின்போது ஒரு வெறுமையை உணர்ந்தது. ”மாணவர் இல்லையேல் சுதந்திர தினம் என்றும் ஒன்று இல்லை” என்ற உண்மையைத்தான் இது
வலியுறுத்தியுள்ளதாக எனக்குப் படுகிறது.

நகரின் அனைத்து பாடசாலைகளினதும் பங்களிப்புடன் அந்த நாட்களில் இப்போது புத்தளம் மத்திய பஸ்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்த மைதானத்தில் சுதந்திர தின மாணவர் அணிவகுப்பு நடைபெறும். அங்கு மத்திய பஸ்தரிப்பு நிலையம் அமைந்த பின்னர் அது சிறிது காலம்
புத்தளம் புனித அன்றூ கல்லூரி மைதானத்திலும், பின்னர் புத்தளம் நகர பொது
விளையாட்டுத் திடலிலும் நடாத்தப்பட்டது. 

கடைசியாக அது புத்தளம் நகரபிதா கே.எ. பாயிஸின் ஏற்பாட்டில் புத்தளம் கொழும்பு முகத் திடலில் கோலாகலமாக நடாத்தப்பட்டது. செலவும்
கொஞம் அதிகம்தான்.

கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டிலும் கோலாகலமான கொழும்பு முகத்திடலில் நடாத்துவதற்கான பிரேணையைச் சமர்பித்து அதற்கான செலவீன மதிப்பீட்டை புத்தளம் நகர பிதா நகர சபையின் 2015 தை மாத
மாதாந்த அமர்வில் சமர்பித்தபோது அது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்
ஏ.ஓ.அலிகாண். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.டீ.என். அமீன்
ஆகியோரின் எதிர்ப்புக்கு ஆளானது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள செலவீன மதிப்பீடான இரண்டு இலட்சம் ரூபா மிக அதிகம் என அவ்விருவரும் வாதிட்டனர். வாதப் பிரதிவாதங்களின்
பின்னர் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை விட ஒரு சதம் தானும் அதிகமாக செலவு செய்வதில்லை என்ற திருத்தத்துடன் பிரேரணை சபையில்
அங்கீகரிக்கப்பட்டது. அந்த சுத்திர தின வைபங்களுடன் சேர்த்து கடந்த ஆண்டு
இறுதிப் பகுதியில் நடைபெற்ற பொது நூலக வாசிப்பு தின போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பரிசளிப்பையும் நடாத்த
திட்மிட்டிருந்தார் நகர பிதா பாயிஸ். அந்த ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நகர பிதா சார்பின்
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் எதிர்பாராத விதமானக
ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க பாடசாலை மாணவர்களின் பங்களிப்பு
தவிர்க்கப்பட்டதால் சுதந்திர தின ஏற்பாடுகளை கைவிடப்பட்டதாக நகர சபை
அறிவித்தது. 

ஆயினும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் சேர்த்து நகரின்
சிரேஸ்ட பிரசைகள் கலந்து கொள்ளும் கலாசார நிகழ்சியை நாடாத்த திட்மிட்ட நகர பிரதா பாயிஸ் ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் இறுதி நேரத்தில் அதுவும் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

காலா காலமாக விமரிசையாக நகரில் நடாத்தப்பட்ட மீலாத் விழாக்கள்
”பித்-அத்துக்கள்” என்ற பெயரால் நிறுததப்பட்டதன் விளைவாக இப்போதெல்லாம் பேச்சாற்றல் , எழுத்தாற்றல் உள்ள சமுகத்தை உருவாக்க
முடியாமல் போனது என கவலைப்படுவோர் இந்த சுந்திரதின வெறுமையைும்
கவலையோடு அணுகுவதை அவதானிக்க முடிகிறது.

இப்படியே போனால் காலப் போக்கில் அடுத்த தலைமுறை சுதந்திர தினத்தையே மறுந்து போகும் அபாயம் பற்றி அவர்கள் கவலை வெளியிடுகிறார்கள்.

சரிதான். மாணவர்களைக் கொண்டுதான் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பது என்ன இந்த நாட்டின் சட்டமா? அல்லது எழுதப்படாத
மரபா? மாணவர் அணிவகுப்பு மரியாதையை விட்டுவிட்டு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பை நடாத்தினால் என்னவாம்? புத்தளம்
நகரத்திலும், அதை ஒட்டினாற் போலும் தரைப்படை, விமாணப்படை, கடற்படை முகாம்கள் என்று எல்லாமே இருக்கின்றன.

தலைமையக பொலிஸ் நிலையம், பிரதி பொலிஸமா அதிபர் அலுவலகம் எல்லாம் இங்கு உள்ளன. இவைகளினால் அடிக்கடி நடாத்தப்படும் அணி
வகுப்புகளைக் கூட நகர மக்கள் கண்டு வருகிறார்கள்.

அப்படியானால் அவாற்றை ஏன் இந்த சுதந்திர தினத்தில் நடாத்த முடியாது என்றும் ஒரு வினா எழுகிறது.

மாணவர்களைப் பொறுத்தவரையில் இந்த சுதந்திர தின விழாக்கள் ஒரு சித்திரவதை என்றுதான் சொல்ல வேண்டும். காலை 7.00 மணிக்கே மாணவர்களை அணிவகுப்பு எற்காடுகளுக்கு வருமாறு வற்றுபுத்துகிறார்கள்.
அணிவகுப்பு தொடங்கி, மேடையில் பேச்சார்களார் தமது நாவண்மையைக் காட்டி முடிக்கும் வரையைில் கொழுத்தும் வெய்யிலில் கால் கடுக்க நிற்கும் மாணவர்கள் தொப்புத் தொப்பென மயங்கி விழும் காட்சி வழமையான
நிகழ்வுகள். நமக்கும் கூட அந்த அனுபவம் இன்னும் மனத்தில் பசுமையாய்
இருக்கிறது. இந்த வருடம் அப்படி ‌யொரு வதையில் இருந்து மாணவர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளார்கள். அதற்காக சுதந்திர தினத்தைக் கொண்டாடவே கூடாது என்ற அர்த்தமா?

வேலைக் கள்ளிக்கு பிள்ளைச் சாட்டு” என்பதைப் போலத்தான் மாணவர் சமுகத்தின் பேரைச் சொல்லி எல்லா சோம்பறிக் கூட்டமும் சுதந்திர நாள்
அன்று சுதந்திரமான தூக்கி நாம் முன்னையோர் பெற்றுத் தந்‌த சுதந்திரத்தின்
பெறுமதியை செல்லாக் காசாக்கிவிட்டார்கள்.

 -எம்.எஸ். அப்பாஸ்

Post a Comment

0 Comments