கர்ப்பப்பை என்பது பெண்களின் இனப்பெருக்க தொகுதியின் ஒரு முக்கிய உறுப்பு. இது பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் காணப்படும். கர்ப்பப்பையின் இரு புறமும் ஒவ்வொரு சூலகம் அமைந்திருக்கும்.
கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதி என்டோமெற்றியம் (Endometrium) என்ற இழையத்தினால் மூடப்பட்டிருக்கும். கர்ப்பப்பையின் வெளிச்சுவர் பகுதி தடித்த தசைப்பகுதியினால்
ஆனது. இதனை மயோமெற்றியம் (Myome trium) என அழைக்கப்படும். இந்த தசைப்பகுதியிலே ஏற்படும் கட்டிகளை பைபுரோயிட் (Fibroids) கட்டிகள் என அழைக்கப்படும். இந்த கட்டிகள் மிகச்சிறிய மாபிள் சைஸில் அல்லது மிக மெதுவாக வருடக்கணக்கில் வளர்ந்து மிகப்பெரிய கட்டிகளாக காணப்படும்.
மிகப்பெரிய கட்டிகளாக வரும்போது இவை பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த Fibroids கட்டிகள் புற்று நோய் அல்லாத கட்டிகள்.பொதுவாக இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் தசைச்சுவர் பகுதியிலே உருவாகும். சில கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதியை நோக்கி வளர்ந்திருக்கும். சில கர்ப்பப்பையில் இருந்து வெளிநோக்கி வளர்ந்திருக்கும்.
பைபுரோயிட் (Fibroids)ஒரு பொதுவான பிரச்சினையா?
பெண்களின் இனப்பெருக்க தொகுதியில் ஏற்படக்கூடிய பொதுவானதும் கூடுதலானதுமான பிரச்சினையே இந்த பைபுரோயிட் (Fibroids). அதாவது 50 வயதுக்கு கீழ்ப்பட்ட 5 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு கட்டாயம் Fibroids காணப்படும். அதுவும் 40 வயதுக்கு கிட்டவுள்ள பெண்களில் இது கூடுதலாக காணப்படும். அத்துடன் கர்ப்பமே தரிக்காமல் இருக்கும் பெண்களிலே இது கூடுதலாக காணப்படும் ஒரு பிரச்சினை.
இந்த பைபுரோயிட்எதனால் ஏற்படுகின்றது?
இது எதனால் ஏற்படுகின்றது என்று சரியாக கூற முடியா விட்டாலும் இவை வளர்வது மாதவிடாய் முடிந்ததும் அதாவது மெனோபோஸ் (Menopause) பருவம் வந்தவுடன் தடைப்பட்டு விடும். அதாவது மெனோபோஸ் பருவத்தின் பின் இந்த பைபுரோயிட்கள் சுருங்கி போய் விடுகின்றன. இதனால் இவை சூலகத்தினால் சுரக்கப்படும் ஹோர்மோன் (Hormone) ஈஸ்ரஜன் (Oestrogen) தூண்டுதலால்தான் வளர்கின்றது. மெனோபோஸ் (Menopause) பருவத்தின் பின்னர் சூலகங்கள் ஈஸ்ரஜன் சுரப்பதில்லை.
இதனால் பைபுரோயிட்கள் வளருவதும் இல்லை. பைபுரோயிட்கள் கர்ப்ப காலங்களில் நன்றாக வளருகின்றன. காரணம் கூடு தலான அளவில் ஈஸ்ரஜன் (Oestrogen) உடம் பில் இருப்பதனால் இந்த கட்டிகள் பரம்பரை யாக தோன்றக்கூடிய ஒரு பிரச்சினை. அதாவது தாய்க்கோ அல்லது பெண் சகோதரிக்கோ இருந்தால் பிள்ளைகளுக்கும் இந்த பிரச்சினை
தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது.
என்ன நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன?
கூடுதலானவர்களில் எந்த நோய் அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு பைபுரோயிட் (Fibroids) இருப்பது தெரியாமலே இருந்து விடுகின்றது. அவர்கள் பரிசோதிக்கும் போதே தற்செயலாக கண்டு பிடிக்கப்படுகின்றது. நோய் அறிகுறிகள் இந்த கட்டிகள் பெரிதாக வளரும் போது தோற்றுவிக்கப்படுகின்றது. அதாவது வயிற்றில் ஒருவிதமான பாரம் மற்றும் வயிறு ஊதுதல் போன்றன சிலரில் ஏற்படும். இன்னும் ஒரு சிலரில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு அதாவது, மாதவிடாய் கட்டி கட்டியாக குருதி வெளியேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன்போது வயிற்று வலியும் ஏற்படும். இவ்வாறான அதிகப்படியான குருதிப்போக்கினால் அவரது உடலில் இரத்த அளவு குறைந்து குருதிச்சோகை ஏற்படும். இதனால் களைப்பும் சோர்வும் ஏற்படும். இந்த கட்டிகள் பொதுவாக வயிற்று வலியை தோற்றுவிக்காது. ஆனால் ஒரு சிலரில் மட்டும் நாரிப்பிடிப்பு அடி வயிற்றுவலி என்பன
ஏற்படும்.
இந்த கட்டிகள் மிகப் பெரிதாக வளர்ந்து அருகிலுள்ள உறுப்புக்களை அழுத்துவதனால் சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. இந்த பைபு
ரோயிட் கட்டிகள் கருத்தரித்தலை தாமதப்ப டுத்தி குழந்தை பாக்கியம் இல்லாத தன்மை யை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இப்படியான ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் வைத்திய ஆலோசனையை பெறுவது சிறந்தது.
எவ்வாறு பைபுரோயிட் கட்டிகள் கண்டுபிடிக்கப்படும்?
பொதுவாக இவை தற்செய லாகக் கண்டுபிடிக்கப்படுகி றது. அதாவது, உங்களது வைத்தியர் உங்களை பரிசோதிக்கும் போது உங்களது கர்ப்பப்பை வீங்கி இருப்பதில் இருந்து கட்டி இருப்பதாக சந்தேகிப்பார். பின்னர் ஒரு ஸ்கான் (Ultra Sound Scan) செய்யும் போது இவை உறுதிப்படுத்தப்படும். கட்டிகளின் எண்ணிக்கை கட்டியின் அளவு என்பவை ஸ்கான் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
சிகிச்சைகள் நோய் அறிகுறிகளை பொறு த்து தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது இர ண்டு முறையான சிகிச்சை முறைகள் உள் ளன. மருந்துகள் மூலம் குணப்படுத்தல் மற்றும்
சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதே இந்த இரண்டு முறைகள் ஆகும்.
இந்தக் கட்டிகள் சிறிதாகவும் நோய் அறிகுறிகளை தோற்றுவிக்காமலும் இருந்தால் உங்களுக்கு எந்த சிகிச்சையுமே தேவையில்லை. ஆனால் நீங்கள் சிறிது காலத்தின் பின்னர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு பார்க்க வேண்டும்.
நோய் அறிகுறிகளை தோற்றுவிக்கும் கட்டி கள் அல்லது பெரிதாக வளர்ந்துள்ள கட்டிகள் சிகிச்சை தேவையானவை. சிகிச்சை முறை உங்களது வயது, நீங்கள் மீண்டும் குழந்தை பெறும் எண்ணம் உள்ளவரா மற்றும் உங்களது நோய் அறிகுறிகளின் உக்கிரம் என்பவற்றுடன் உங்களது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும்.
எவ்வாறான சத்திர சிகிச்சைகள் உள்ளன?
இரண்டு வகையான சத்திர சிகிச்சை முறை கள் உள்ளன. ஒன்று கட்டியை மட்டும் அகற்றுதல் மற்றது கர்ப்பப்பையையும் கட்டியுடன் சேர்த்து அகற்றுதல்.
வயது குறைந்த பெண்கள் மற்றும் மீண்டும் கருத்தரிக்கும் எண்ணம் உள்ள பெண்களில் கட்டியை மட்டும் அகற்றுவோம். (Myom ectomy) இதன் போது கர்ப்பப்பை பாதுகாப்பாக
தங்க விடப்படுகிறது. இது முழு மயக்கம் கொடுத்து செய்யப்படும். இதற்கு எடுக்கப்ப டும் நேரம் கட்டிகளின் எண்ணிக்கையையும் பருமனையும் பொறுத்து 1-2 மணித்தியாலங் கள் எடுக்கும். இதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் கருத்தரிக்கலாம். ஆனால் இந்த சிகிச்சை முறையில் பின்னர் மீண்டும் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
சற்று வயது கூடிய பெண்களில் அதாவது 40 வயதையும் தாண்டியவர்கள் மீண்டும் கருத்தரிக்கும் எண்ணம் இல்லாதவர்களில் கர்ப்பப்பையும் கட்டியும் முற்றாக அகற்றப்படும். (Hysterectomy) இதன் போது கட்டாயம் சூலகங்கள் (Ovaries) அகற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.இது உங்களிடம் சத்திர சிகிச்சைக்கு முன்னர்
கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சூலகங்கள் அகற்றப்பட்டால் உங்களுக்கு ஹோர்மோன் மாத்திரைகள் உட்கொள்ள நேரி டும். இதன் போதே மெனோ போஸ் அறிகுறி கள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறான கட்டி யுடன் சேர்த்து கர்ப்பப்பையும் அகற்றும் போது மீண்டும் கட்டி ஏற்பட வாய்ப்பில்லை என்பது ஒரு அனுகூலம்.
என்ன வகையான மருந்து வகைகள் இதன் சிகிச்சையில் வழங்கப்படும்?
ஈஸ்ரஜன், ஹோர்மோனே பைவுரோஸ் வளர்ச்சிக்கு காரணம். இந்த ஈஸ்ரஜன் ஹோர்மோனை கட்டுப்படுத்துகின்ற மருந்துகளே பைவுரோயிட்டின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி சிறிதாக்கும். இதனை Gnrh ஊசி என்று அழைக்கப்படும். இது ஒரு தற்காலிக சிகிச்சை முறையே. இதனை நிறுத்திய பின் கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்கும். அத்துடன் இந்த ஊசியின் விலையும் அதிகம். இதனால் இது எமது நாட்டில் அதிகம் பிரபல்யம் அடை யவில்லை.
பைபுரோயிட்டு இருக்கும் போது கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் எவை?
பைபுரோயிட்டின் அளவிலும் இருக்கும் இடத்திலும் பொறுத்து கருத்தரித்தல் தாமதம் அடையலாம். அவ்வாறு கருத்தரித்தால் ஒரு பகுதியினரில் எந்த பிரச்சினையும் இல்லா மல் கர்ப்பிணி காலம் நிறைவு பெற்று சாதாரண பிரசவம் நடைபெறும். மறு பகுதியினரால் கருச்சிதைவு திகதிக்கு முந்திய பிரசவம் பிரசவச் சிக்கல்கள் என்பன ஏற்பட வாய்ப்புள்
ளது. எனினும் கர்ப்ப காலங்களில் பைபு ரோயிட்டுக்கு என ஒரு சிகிச்சையும் வழங்கு வதில்லை.
டாக்டர் சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை பம்பலபிட்டி


0 Comments