1355 : இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் நகரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1763 : தற்போது கனடாவின் ஒரு பகுதியாகவுள்ள கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு பிரான்ஸ் அளித்தது.
1798 : லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
1815 : கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1846 : பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும்
இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1863 : அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
1870 : கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).
1897 : மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1914 : யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
1931 : புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1954 : வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
1964 : அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS எச்.எம்.ஏ.எஸ்.
மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS எச்.எம்.ஏ.எஸ். வொயேஜர் என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 : தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி முதல் தடவையாக
தெரிவு செய்யப்பட்டார்.
1981 : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள கசினோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 198 பேர் உயிரிழந்தனர்.
1989 : அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவின் தலைவராக ரொன் பிரவுண் தெரிவானார். அமெரிக்காவின் பிரதான அரசியல் கட்சியொன்றில் இத்தகைய பதவியை வகித்த முதலாவது ஆபிரிக்க அமெரிக்கர் ரொன் பிரவுண் ஆவார்.
1996 : ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியான "டீப் புளு" உலக முதற்தரவீரர் காரி
கஸ்பரோவை முதல் தடவையாக வென்றது.
2009 : தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களான அமெரிக்காவின் இரிடியம் 33,
ரஷ்யாவின் கொஸ்மோஸ் -2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
2013 : இந்தியாவின் அலஹாபாத்தில் கும்பமேளாவின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததுடன் 39 பேர் காயமடைந்தனர்.


0 Comments