வன்னி மாவட்டம், மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வன்னி மக்கள் வாழும் பிரதேசங்களில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் சம்பந்தமாக வட மாகாண சபை உறுப்பினரும், மு.கா.உச்சபீட உறுப்பினருமான தேசமானிய எச்.எம் ரயீஸ் தலைமையிலான குழுவினர் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலாமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான கௌரவ அல்-ஹாஜ் ரவுப் ஹகீம் அவர்களையும், மு.கா செயலாளர் நாயகமும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் ஹசன் அலி அவர்களையும் 12.02.2015 புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
மு.கா.தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவுப் ஹகீம் அவர்களை கட்சி தலமையகமான தாருஸ்ஸலாமில் சந்தித்த எச்.எம் ரயீஸ் தலைமையிலான பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்-ஹாஜ் சட்டத்தரணி எ.டப்ல்யூ.ரம்சீன் மற்றும் உறுப்பினர்களும், பு/உலுக்காப்பள்ளம் ஹுசைனீயா புறம், மற்றும் மன்னார் மாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர் பேரோஸ் கான் தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். இவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் தங்கள் கிராமங்களுக்கு அவசரமாக செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் சம்பந்தமாக அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். குறிப்பாக மழைக் காலங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் செல்லாமல் வழிந்தோடும் வடிகாலாமைப்பு சம்பந்தமாக எடுத்துக் கூறினர். இதன் போது எதிர்வரும் திங்கள் கிழமை தான் தனது அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிடுவதாகவும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேட்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன் பிறகு சுகாதார இராஜாங்க அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்த இக்குழுவினர் தங்கள் கிராமங்களில் நிலவும் சுகாதார பிரைச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறினர். அத்துடன் பு/எருக்கலம்பிட்டியில் கிளினிக் ஒன்றை கட்டித் தறுமாறும் கோரிக்கை விடப்பட்டது. அதட்கு பதிலளித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் தான் இதட்கு தேவையான நடவடிக்கைகளை மேட்க்கொள்வதாக உறுதியளித்தார்.
வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்த்துவப்படுத்தும் மு.கா உச்சபீட உறுப்பினர் எம்.டி.எம். தமீம் அவர்களும் மாகாண சபை உறுப்பினர் ரயீஸ் அவர்களுடன் இணைந்து மன்னார் முசாலி மாவட்டத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் சம்பந்தமாக இரு அமைச்சர்களிடமும் எடுத்துக் கூறினார்.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஸ்லம் அவர்களும், மாகாண சபை உறுப்பினரின் முகாமைத்துவ உதவியாளர் எம்.சி.எம். லரீப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தகவல்:
மாகாண சபை உறுப்பினர் ஊடக பிரிவு.

0 Comments