நுகேகொடையில் சமீபத்தில் மகிந்தவுடன் நாட்டை வெற்றிகொள்வோம் என்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது மனைவி தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச முறைகேடான நிலையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பற்றி கூட்டத்தில் விமல் வீரவன்ஸ கருத்து வெளியிட்டு இருந்தார்.
எனது மனைவியை இன்று கைது செய்வார்கள் நாளை கைது செயவார்கள் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் கைது செய்ய எவரும் வருவதில்லை, வாக்குமூலமும் பெறுவதில்லை. வாக்குமூலம் பெறும் வரை நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
இதை எல்லாம் கூறி எங்கள் பயணத்தை நிறுத்த முடியாது என விமல் வீரவன்ச கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் அவ்வாறு தெரிவித்த போதிலும் விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments