Subscribe Us

header ads

2018ம் ஆண்டு இலங்கையில் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியும்: சம்பிக்க ரணவக்க


2018ம் ஆண்டு இலங்கையில் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியனவற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய 20 இடங்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் ஏற்றுக்கொள்ள தர நிர்ணயங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த அரசாங்கத்தைப் போன்று சில நாடுகளுக்கு மட்டும் பக்கசார்பான முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

மன்னார் பகுதியில் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலும் எதிர்வரும் 2018ம் ஆண்டு எரிவாயு பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என சம்பிக்க ரணவக்க சிங்கள இணையத்தளமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments