அண்மையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு
எதிராக மேல் மாகாணசபையில் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்றதாகவும் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அண்மையில் வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு பதிலடியாக மேல் மாகாணசபையில் நேற்று ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி பிரதம அமைப்பாளர் சிசிர ஜயகொடியினால் தீர்மானம் அவையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான மெரில் பெரேரா இந்த தீர்மானத்தை வழிமொழிந்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சிகளின் இணக்கத்துடன் இந்த தீர்மானம் ஏகமனதாக மேல் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


0 Comments