அஸ்ரப் ஏ சமத்
இன்று புதன் கிழமை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்திப்பதற்காக செத்சிரிபாயவில் காலை 07 மணிக்கே கொழும்பு மாவட்டத்தில் வாழும் மூவின மக்கள் 700க்கும் மேற்பட்டோர் கொழும்பில் வீடுதாருங்கள் எனக் கேட்டு கடிதங்களுடன் வந்துஅமைச்சில் நெருக்கமாகவும் வரிசையிலும் காத்து நின்றனர்.

உடன் அமைச்சர் சஜீத் பிரேமதாஸ உடன் தனது அறையில் இருந்து வந்து காத்து
நின்ற மக்கள் மத்தியில் ‘எனக்கு கிராமிய வீடுகள் சம்பந்தமாகவே பார்க்க
முடியும். கொழும்பில் வீடு தேவையாக இங்கு வந்திருப்போர்
தயவுசெய்து அமைச்சர் ரவுப் ஹக்கீமை சந்தியுங்கள் கொழும்பில் வீடுகளை
நிர்மாணிக்கும் பொறுப்புநகர அபிவிருத்தி அதிகாரசபையிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நகர அபிவிருத்திநீர் வழகல் அமைச்சரிடம்
தான் வீடு கேட்கவேண்டும். அவருடைய அமைச்சு பாரளுமன்றத்திற்கு செல்லும்
வீதியில் பெலவத்தையில் உள்ளநீர் விநியோக வடிகால் அமைச்சு உள்ளது.
அங்குசெல்லுங்கள். எனக் கூறினார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபை முலம் கிராமங்களில் 1 இலட்சம் ருபா வீடமைப்புக்கடன் மட்டுமே தர முடியும். நகர வீடமைப்பு தன்னிடம் இல்லை என அறிவித்தார்.

0 Comments