-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் அரையாண்டுக்கான பொலிஸ் பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (09) காலை இடம்பெற்றது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சகல பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல்.பீ.எஸ்.பீ.சந்துன்கஹவதவின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பொலிஸ் அதிகாரி சந்தனாயக, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-Tamil Mirror-

0 Comments