Subscribe Us

ஹாஜா சஹாப்தீன் சேர் அவர்களின் பணிக்கு பங்களிப்பு செய்வோம் !


மதிப்புக்குரிய ஹாஜா சஹாப்தீன் சேர் தொடர்பில் பல்வேறு பரிமாணங்களில் ஆராயலாம். இருப்பினும் அவரது பின்வரும் பணி என்னை மிகவும் கவர்ந்தது. உங்களையும் கவரும் என்று எண்ணுகிறேன். அத்தோடு நாம் அதற்கு முடிந்த பங்களிப்பை வழங்கவும் வேண்டும்.

அன்னார் தனக்கு அல்லாஹ்வால் கிடைத்துள்ள மொழி ஆற்றலைப் பயன்படுத்தி பௌத்த மக்களிடையே இஸ்லாத்தைப் பற்றி புரிதல்களை ஏற்படுத்துகிறார். தப்பபிப்பிராயங்களை முடிந்தவரை களைகிறார். இதற்காக அவர் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்துகிறார். இதற்காக அவர் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் மிக அதிகமாகும்.தற்போதும் இப்பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

எனவே அவருக்கு நாம் கேட்காமலேயே உதவலாம். மேலும் அவர் இலங்கையின் தலைசிறந்த பத்திரிகைகளுள் ஒன்றான ராவய உடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.

ராவய அவர் மீது நன் மதிப்பு கொண்டுள்ளது. இந்த உறவைக் கூட அவர் சமுதாயம் மற்றும் சமயத்துக்கு பயன்படுத்த தவறவில்லை.

அல்லாஹ் அவரது இந்த பணியை பொருந்திக் கொள்வானாக. அளவிலா கூலியை அள்ளி வழங்குவானாக.

Post a Comment

0 Comments