Subscribe Us

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட அவுஸ்ரிட்ச் முகாம் குறித்த வழக்கு விரைவில்


உலகையே அதிரவைத்த ஜேர்மனியின் நாசிப் படைகளின் மனித குலத்திற்கு எதிரான மிகவும் கொடூரமான படுகொலைகள் குறித்த வழக்கு விசாரணையொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜேர்மன் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.



70 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியின் நாசி படைகளாலால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் ஆட்ஸ்விச் சித்திரதை முகாம் தொடர்பான வழக்கொன்றின்  தீர்ப்பு நாள் நெருங்கி வரும் நிலையில் குற்றம் சுமத்தப்படட்டுள்ள ஆட்ஸ்விச் முகாமின் பதிவாளரான 93 வயதுடைய ஒஸ்கர் குரோனிங் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இவர்  மீது சுமார் 300000க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. மேலும் இவர் அங்கு பணியாற்றிய 1940 தொடக்கம் 1945 வரையிலான காலப்பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூத இனத்தவர்கள் நச்சு வாயு நிரம்பிய அறைகளில் பூட்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் இவ் வழக்கு தீர்ப்பின் போது நாசி முகாமிலிருந்து தப்பியவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினHகள் மற்றும் வழக்கு தொடுத்தவHகள் கலந்து கொள்ளவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான நாசிகளின் இதுபோன்ற இன அழிப்பு நடவடிக்கைள் வராலாற்றில் ஒரு முக்கிய குறியிடாகவே பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments