Subscribe Us

header ads

அண்ணன் வீட்டில் சோகமாக! தம்பி அமெரிக்காவில் சுகபோகமாக: நவீன்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி விட்டு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது சகோதரரையும், சுதந்திர கட்சி உறுப்பினர்களையும், நாட்டு மக்களையும் நடுத்தெருவில் நிர்க்கதியாக விட்டு விட்டு பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறமையுடைய சிறந்த அரசியல்வாதி, பலசாலி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்து வீட்டுக்கு போக மிக முக்கிய காரணம் பசில் ராஜபக்ஷ எனவும், அவர் தனது தந்தையின் நல்ல நண்பர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் கடந்த கால ஆட்சியில் பசில் மக்கள் பிரதிநிதிகளை மக்களுக்கு சேவையாற்ற விடாது தடுத்ததுடன் அடக்குமுறைகளையும் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததொரு விடயம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருந்த பசில் ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களை நடுத்தெருவில் கைவிட்டு மக்களையும் நடுத்தெருவில் கைவிட்டு அமெரிக்காவில் சுகபோகமாக வாழ்கிறார்.

முன்னாள் அரசாங்கம் தமிழ் பேசும் மக்களை ஓரம் கட்டியதுடன், அவர்களை மதிக்கவில்லை, சிங்கள மொழி பேசும் மக்களின் வாக்குகள் மாத்திரமே போதும் நாம் வென்று விடுவோம் என்ற ஆணவத்தில் செயற்பட்டு வந்தார்கள்.

எனவேதான் தமிழ் பேசும் மக்களை மகிந்தவின் ஆட்சியை நிராகரித்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கி வெற்றி பெற செய்தார்கள்.

தமிழ் பேசும் மக்களின் இந்த நடவடிக்கை கடந்த கால ஆட்சியாளர்களுக்கு தகுந்த பதிலடி என்பதை நான் இச்சபையில் சுட்டிக்காட்டுகின்றேன் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments