Subscribe Us

இன்னும் சில வருடங்களில் இறக்க போகிறேன்.. புற்றுநோயாளி செய்துவரும் மாபெரும் உதவி

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர், தன்னை போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Barrie நகரைச் சேர்ந்த Frank Nelson என்பவர் ஒரு புற்றுநோயாளி.

ஒரு வருடங்களுக்கு முன்பு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நோயை குணப்படுத்த முடியாது என்றும், சிறிது காலம் மட்டுமே அவர் உயிரோடு இருக்க முடியும் எனவும் கூறியிருந்தனர்.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த Frank, தனது இறப்பை நினைத்து வருத்தப்படுவதை விட, இதே நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு வருமான ரீதியாக உதவ முன்வந்தார்.

இதற்காக தனது சேமிப்பிலிருந்து 1000 டொலர்கள் எடுத்து உதவி செய்ய முன்வந்ததுடன், பேஸ்புக்கில் ‘Paying It Back’ என்ற ஒரு புதிய பக்கத்தை தொடங்கினார்.

இதில் சமீபத்தில் வரை 7,000 பேர் இணைந்து புற்றுநோயால் பாதித்தவர்களின் தகவல்களை Frank உடன் பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு தகவல் பெற்று அறிமுகமான Nicole Jannis என்ற பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தார்.

அந்த பெண்ணை சந்தித்த Frank, அவர் நோய் குணமடைய வாழ்த்தியதோடு அவருக்கு 1000 டொலருக்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய Frank, மற்றவர்களுக்கு உதவும்போது அவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்க்கும்போது தனது நோயை அறவே மறந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

Frank உடைய இந்த கருணை மிகுந்த நடவடிக்கைகள் அந்நகர மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



Post a Comment

0 Comments