கடந்த 1945ம் ஆண்டு பெப்ரவரி 13ம் திகதி ஜேர்மனியின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்றே கூறலாம்.
ஏனெனில் அன்றைய தினத்தில், ட்ரெஸ்ட்டின்(Dresden) நகரத்தில் தாழ்வாக பறந்து கொண்டிருந்த ராணுவ விமானங்கள் RAF மற்றும் USAAF ரக குண்டுகளை வீசியது.
சுமார் இரண்டு நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 3,900 டன் எடைக்கொண்ட 1,200 வெடிகுண்டுகளை வீசி நகரே சுடுகாடானது.
இந்நிலையில் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்ததால், நகரம் முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது.
இந்த தாக்குதலில் பழங்கால வரலாற்று கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதுடன், நகரின் மத்தியில் இருந்து சுமார் 8 சதுர கி.மீ தூரத்தில் இருந்த அத்தனை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சுவடில்லாமல் போனது.
இந்நகரின் பேரழிவை பார்த்த அரசாங்கம், குழந்தைகள் உட்பட ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என கருதியது.
ஆனால் சமீபத்தில் 2010 ஆம் ஆண்டு நடத்திய விசாரணையில் தாக்குதலில் 25,000 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.

0 Comments