இலங்கையின் ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோர் 5வது உலகக்கிண்ணப் தொடரில் பங்கேற்கப் போகும் வீரர்கள் என்ற பெருமையை பெறவுள்ளனர்.
தற்போது நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் மூத்த வீரர்கள் பலரும் விளையாடவில்லை. சில முன்னணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மூவரும் 1999, 2003, 2007, 2011 உலகக்கிண்ண தொடருக்கு பின்னர், தற்போது 2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.
வெட்டோரி 1999 உலகக்கிண்ண அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை.
இம்ரான்கான், வாசிம் அக்ரம், இன்சமாம் (பாகிஸ்தான்), ரணதுங்கா, அரவிந்த டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் (இலங்கை), லாரா, சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்), பொண்டிங் (அவுஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஸ்டீவ் டிகாலோ, தாமஸ் ஒடோயா (ஜிம்பாப்வே) ஆகியோரும் 5 உலகக்கிண்ணத்தில் விளையாடி இருந்தனர்.
மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியாண்டட் (1975, 1979, 1983, 1987, 1992, 1996), சச்சின் டெண்டுல்கர் (1992, 1996, 1999, 2003, 2007 2011) ஆகிய இருவரும் தான் அதிகபட்சமாக 6 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய சாதனையாளர்களாக இருக்கின்றனர்.


0 Comments