எம்.எஸ். அப்பாஸ் தவிர்க்க முடியாதுபோன இழப்புக்கள்..... எனது நினைவுகள் சரியாக இருக்குமானால் 1989 ஆம் ஆண்ணடு எண்று எண்ணுகிறேன். புத்தளம் நகர சபையின் தலைவராக மர்ஹும் பிஸ்ருல் ஹாபி அவர்கள் செயற்பட்ட காலம். அப்போது தில்லையடி எஸ்.ஏ.சலீம்காண் நகர சபையின் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் சபையில் ஒரு பிரேரணையை அவர் சமர்பித்தார்.
இப்போதும் கூட அது மிகப் பெறுமதியான பிரேரணை என்றுதான் எனக்குப் படுகிறது. புத்தளம் குருனாகல் பிரதான வீதியில் புத்தளம் நகர சபையின் பழைய அலுவலகக் கட்டிடத்துக்கு முன்னால், நகர சபையின் வேலைகள் முன்றலை (Works Yard) ஒட்டினாற் போல் அமைந்துள்ள வெள்ளையர் கால மையவாடி முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்த , இரண்டொரு கல்லறைகள் காலத்தை வென்று நின்ற, பேய்ப்படங்களில் வரும் இடம் போல கோரமாகக் காட்சியளித்திருந்த, கைவிடப்பட்ட மையவாடியை நகர சபை பொறுப்பேற்று அதில் கட்டிடங்கள் அமைத்து சபையின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நகர சபை உறுப்பினர் சலீம்காண் சமர்ப்பித்த பிரேரணை.
ஒன்பது உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்த அந்த மன்றிலே இருந்த ஒரேயொரு தமிழ் சமூக உறுப்பினர் புத்தளம் சென் மேரீஸ் தமிழ் வித்தியாலய அந்த நாள் அதிபர் எம்.பி. மோஸஸ் அதற்கு எதிர் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். கத்தோலிக்க மக்களின் விசுவாசப்படி இறந்தவர்கள் அவர்களது கல்லறைகளில் உயிருடன் இருக்கிறார்கள் .
எனவே அவற்றை அகற்ற முடியாது. அவ்வாறு செய்வதானால் கொழும்பு சென்ட் கிளமனற் தேவாலய ”விக்கார் ஜெனரல்” அவர்களின் அனுமதி பெறப்பட வேண்டும். இது நகர சபை உறப்பினர் மோஸஸ் அவர்களின் பிரதி வாதம். அப்போது உப தலைவராக இருந்த பெளத்தரான டப்ளியு. எம். மென்டிஸ் - புத்தளம் ஸ்ரீதர புகைப்பட நிறுவனத்தின் தாபகர் - தனது எதிர்வாதத்தை முன்வைத்தார்.
அந்த கைவிடப்பட்ட மையவாடியின் முன்னால் இருப்பது குருனாக்கல் பிரதான வீதி, பின்புறத்தில் இருப்பது விவசாயத் திணைக்களம், ஒரு பக்கத்தில் நகர சபை பாதை, மறு பக்கத்தில் நகர சபை வேலைகள் முன்றல். இதற்குள் இருக்கும் ஒரு பொதுரு மையவாடி அரசாங்க சொத்துத்தான். அதை நகர சபை சுவீகரிக்க ஏன் ”விகார் ஜெனரல்” அங்கீகாரம் பெறப்பட வேண்டும்? இது உப தலைவர் மென்டிஸ் அவர்களின் வாதம்.
ஆயினும் 07 முஸ்லிம் உறுப்பினர்க, 01 பௌத்த உறப்பினர்களும் ஒரு தமிழ் உறுப்பினரிடம் தோல்வி கண்டார்கள். அந்தத் தோல்விக்கு எது காரணமாக இருந்திருக்கலாம்? 08 உறுப்பினர்களின் பலவீனமா, மர்ஹும் ஹாபி அவர்களின் முன்யோசனை அற்ற தீர்மானமா.? அதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கத்தோலிக்கர்களின் ”விக்கார் ஜெனரலுக்கு” எழுதுவது என ஹாபி தீர்மானத்தை அறிவித்தார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதைதான் அது. அதுவரைக்கு அப்படி ஒரு நிலத் துண்டு புத்தளம் கொழும்பு வீதியில் உள்ள ”சென்ட் கிளமனற் தேவாலயத்துக்கு சொந்தமானது” என்பது விக்கார் ஜெனரலுக்கும் தெரியாது. புத்தளம் ஜெனரல் பப்கிளக்குக்கும் தெரியாது.
கடிதம் போனதுதான் தாமதம் அந்த காணியை ”ராதா” என்ற பெண்மணியின் பெயருக்கு அந்த நிலத்தை கைமாற்றம் செய்யும் உறுதி ஒன்று அவரச அவரசமாக தாரிக்கப்பட்டது. அந்த நிலம் எப்படியோ அந்த தேவாலயத்தின் சொத்தானது. என்றாலும் கூட அது மிக நீண்ட காலமாக பராமரிப்பின்றிக் கிடந்தது. துர் நடத்தைகள் உட்பட கழிவறைத் தேகைளுக்கம் கூட அது பயன்பட்டது.
கடந்த வருடம் அந்தக் காணி ஒரு பாதிரிமார் குழுவினால் துப்புரவு செய்யப்பட்டது. இரண்டொரு நாட்களின் பின்னர் அங்கு உரிமைப் பிரச்சினையின் பேரில் இரு பாதிரி குழுக்கள் பிரச்சினைபட்டுக் கொண்டார்கள். ஒரு நாள் ஒரு ஒழு அங்கு குடில் ஒன்றை அமைக்கும் அது மறு நாள் இன்னுமொரு குழுவினால் உடைக்கப்படும்.
இப்படித் தொடரந்து கொண்டு சொன்று கடைசியாக ஒரு குழு அந்தக் காணியைச் சுற்றி பச்சைத் தகர வேலி கட்டியது. அங்கு தனியார் பாதுகாப்புச் சேவையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு ஏதேதோ நடகக்கிறது. அங்கு எதுவும் நடக்கட்டும். அது நமது பிரச்சினையும் இல்லை. மர்ஹும் ஹாபி அவர்கள் மிகவும் நேர்மையான மனிதர்.
கண்டிப்பான பேர்வளி. ஆனால் இம்மாலதிரியான தருணங்களில் துணிந்து நிற்கும் தைரியம் அவரிடம் இருக்கவில்லை. அந்தப் பலவீனத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள். அது இந்தக் காலத்தில் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மட்டும் கேட்க வேண்டும் போலிருந்தது. விடை காண புத்தளம் மக்களிடம் விட்டு விடுகிறேன். எம்.எஸ். அப்பாஸ்
-Mohamed Azwar-
0 Comments