130 மணப்பெண் தோழிகள், 103 மண மகன் தோழர்கள் சகிதம் ஜோடியொன்று ஆடம்பரமாக திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் பிரித்தானியாவில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
லீட்ஸை சேர்ந்த அலெக்ஸ் சிமொன்ஸ் (32 வயது), அமி எவிங் (26 வயது) ஆகியோரே வடயோர்க் ஷியாவிலுள்ள ருட்டிங் பார்க் ஹோட்டலில் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்களது திருமணம் அதிகளவில் மண ப்பெண் தோழிகள் பங்கேற்ற திருமணம், அதிகளவில் மணமகன் தோழர்கள் பங்கேற்ற திருமணம் ஆகிய இரு உலக சாதனைகளை படைத்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் 2003 ஆம் ஆண்டு கனடாவில் 47 மணமகன் தோழர்கள் பங்கேற்ற திருமணம், 2013 ஆம் ஆண்டில் 126 மணப்பெண் தோழிகள் பங்கேற்ற திருமணம் என்பவற்றால் நிறைவேற்றப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
0 Comments