Subscribe Us

header ads

ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதிய நான்கு வாகனங்கள்


ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய சம்பவம் இன்று பகல் காத்தான்குடி நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினால் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் வாகனங்களுக்கும் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இன்று பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய டிப்பர் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டி சிறிய கப் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்களானது. இதனால் வாகனங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகின.
காயமடைந்த இருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக சில மணிநேரம் மட்டக்களப்பு -கல்முனை பிரதானவீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதலில் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியமையாலேயே பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
 

(ஜவ்பர்கான்)

Post a Comment

0 Comments