Subscribe Us

புத்தளம் புத்தள மக்களுக்குத்தான் வடக்கு மக்கள் சொந்த பூமிக்கு செல்ல வேண்டும்..


வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை புத்தளம் வரவேற்றது.வடக்குமக்களும் யுத்த காலம் என்பதால் அங்கேயே இருந்தீர்கள்.

யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் தாண்டியாச்சு.ரேசன் கொம்பன்ஷேசன் கிடைச்சாச்சு.(கண்துடைப்புகேனும்).இனியும் புத்தளத்தில் இருக்க நமக்கு உரிமை இல்லை.வடக்கில் மீள்குடியேற்றம் சரியான புரிதலில் சரியான தரவுகள் கொண்டு அதன் இலக்கண விதி அமைத்து நடக்கவில்லை.

விவசாயம் செய்து பிழைக்க வேண்டும் என்று போனவர்கள் புத்தளத்தில் இருப்பவர்கள் காணியை களவாடி வருகினறனர்.உங்களை புலிகள் விரட்டியும் போதா? சொங்கிகளா.(நமது காணியும் அதில் அடங்கும் என்பது தனி விஷயம்).எனக்கு எப்ப தோணுதோ அப்ப வந்து நாட்டுல இருக்கிற எல்லா செக்சன்லயும் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன்.திருந்தாத ஜென்மங்கள்..இப்படி பலபேர் காணி களவாடி திரிகின்றனர்.இன்னுமொரு விடுதலை புலி வந்தாலும் திருந்த போவதில்லை இவர்கள்.இப்ப விஷயத்துக்கு வாரன்.

புத்தளத்தில் கஷ்டப்பட்டு காணி வாங்கி தொழில் துவங்கி படித்து பட்டம் பெற்று அங்கேயே படிப்பித்து அலுவகம் செல்பவர்கள் மீண்டும் வடக்கு சென்று ஸீரோவில் இருந்து வாழ விரும்பவில்லை என்பது அவர்கள் நியாயம்.

இடம்பெய்ர்ந்தவர்கள் வடக்கு சென்றால்தான் அவர்களுக்கு புனர்வாழ்வு செய்து தருவோம் என்று அரசு கூறுகிறது நியாயம் இல்லை.வடக்கு மக்கள் ஏற்கனவே புலிகளால் தமது மானம் பணம் காணி வீடு படிப்பு பொருளாதாரம் தன்மானம் பூர்வீகம் எல்லாவற்றையும் இழந்து வெறும் ஜடமாக உள்ள நிலையில் அவர்களுக்கு மீள்குடியேற்றம் என்ற திட்டம் சரியான முறையில் செய்யப்பட்டு அவர்கள் கையில் வீட்டு சாவி கொடுக்கப்பட்டாலே அது மீள் குடியேற்றம்.

அரசு ஒருபக்கம் இதை செய்ய மறுக்கும் நிலையிலும் மக்கள் ஒருபக்கம் வடக்கு செல்ல மறுக்கும் இந்த எதிரும் புதிருமான நிலையில் சரியான தீர்வு என்ன?

வடக்கு மக்கள் சொகுசாக அசையாத பிணமாக புத்தளத்திலும் மன்னாரில் கிடைத்த சின்ன பட்ஜெட் வீடுகளையும் வைத்து அமைதியாக இருந்தால் எதுவும் நடக்க போவதில்லை.இது நமது வாழ்வாதார பிரச்சினை அல்ல.பொறுமையோடு வாழ்ந்து மடிய.இது நமது இருப்பின் பிரச்சினை.இது ஒரு சமூகத்தின் பூர்வீக பிரச்சினை.நமது கலாசார ஒழுங்கியல் பிரச்சினை.நமது கல்வி பொருளாதார பின்னடைவு பற்றிய பிரச்சினை.நமது சுயத்தின் பிரச்சினை.நமது அடையாளத்தின் பிரச்சினை.

நமது வாழ்வு சாவு,இகழ்வு புகழ்வு,உழைப்பு இழப்பு,செல்வம் செழிப்பு,படிப்பு மதிப்பு,உயர்வு தாழ்வு,சண்டை சமாதானம் எல்லாமே நமது பூர்வீக பூமியில் இருந்தே நடக்க வேண்டும்.தற்காலிகமாக சென்ற இடத்தில் கூடாரம் இடலாம் கோடியில் மாடிவீடுகட்டி அங்கேயே இருந்துவிட முடியாது.அது அகதி வாழ்க்கை அல்ல மாறாக ஆக்கிரமிப்பு வாழ்க்கை.நமது பூர்வீக பூமியை விலைபேசும் வாழ்க்கை.

வடக்கு முஸ்லிம்களே இன்னும் தற்காலிக பதவி பணம் என்பதற்காக உங்கள் சொந்த பூமியை இழந்து வாழ விரும்புகிறீர்களா?வடக்கில் இலவச காணி என்றால் ஓடிவிடுகிறோம் வடக்கில் இலவச வீடு என்றால் ஓடிவிடுகிறோம்.காணியையையும் வீட்டையும் அங்கு எடுத்துவிட்டு வாழ்வதோ புத்தளத்தில்தான்.

உலகில் அப்பாவி மக்கள் என்றால் புத்தள மக்கள்தான் என்று சொல்ல வேண்டும்.வந்தவர்களுக்கு வாழ்வாதாரம் செய்து கொடுத்தார்கள்.வந்தவர்களோ புத்தளத்தில் ரேசன்ல இருந்து சொந்தமாக கட்டிய வீடு இலவசமாக கொடுத்த வீடு என்று ரெண்டு வீடு வடக்கில் கொடுக்கும் மூன்றவாது வீடு என்று பூர்வீகம் தொலைத்து சொத்து குவிப்பிலும் கொள்ளை அடிப்பிலும் இரங்கி உள்ளனர்.ஆனால் வந்தவர்களை வாழவைத்த புத்தள மக்களில் வீடே இல்லாத குடும்பம்.திருமணம் முடிகாக்காத குமர்களுடன் வாழ்கையை தொலைத்த குடும்பம்,கணவனை இழந்த விதவை என்று அடிப்படை வசதியின்றி வாழ்கின்றனர் பலர்.

வடக்கு முஸ்லிம்களோ வன்னியில் மூன்று பாராளுமன்ற பிரதி நிதித்துவம் அமைச்சுக்கள் இருந்தும் பூர்வீகம் பற்றிய எந்த கணவும் இன்றி சிந்தனையும் இன்றி வாழ்வது நமது பூர்வீகத்துக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல புத்தள சமூகத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

சிந்தியுங்கள் சகோதரர்களே.நமது பூர்வீக பூமியில் வாழ முயற்சியுங்கள் நமது பிள்ளைகளாவது அங்கு வாழட்டும்.அடுத்த சமூகத்தில் விருந்தாலியாக செல்லலாம் அவர்கள் பூமியில் சொந்தம் கொண்டாட முடியாது.நாம் நமது அரசியல் தலைமைகளை இதற்காக உற்சாகப்படுத்த வேண்டும்.நமது பூர்வீகம் நமது பூமி நமது சொத்துக்கள் ஏற்கனவே இருந்ததில் பாதியளவாவது சரி செய்யப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் நாம் செல்ல வேண்டும்.இன்னும் சில வருடங்களில் முழு புனர்நிர்மாணமும் நடக்கும் என்ற உத்தரவாததுடனும் அதற்கான திட்டமிடல் ஒதுக்குதல் என்ற எதிர்கால திட்டமிடல் பற்றிய ஆணையம் மூலம் இதை செய்து முடிக்க அரசை வலியுறுத்தும் போராட்டங்கள்,எழுச்சிகள்,ஆர்வமூட்டல்கள் கவனயீர்ப்புகள் நடத்தப்பட வேண்டும்.வெறும் கருப்பு ஒக்டோபர் மூலம் முள்ளி வாய்க்காலில் முடங்கி போன விடுதலை புலிகளை நொந்து எந்த பிரயோசனமும் இல்லை.அவர்கள் செய்தவற்றுக்கு அவர்கள் அனுபவித்தனர் நாம் அனுபவித்ததுக்கு நமக்கு என்ன பிரதியீடு?பூர்வீக பூமிக்கு பிரதியீடு தர முடியுமா?எமது பூமி நமக்கு வேண்டும்.இதற்கு நாம் நடைபிணமாக இருந்து எந்த பிரயோசனமும் இல்லை.

சிந்திப்போம் சகோதரர்களே.தூங்கியது போதும்.அடங்கியது போதும்.அடிமைப்பட்டது போதும்.அடுத்தவர் பூமியில் நாம் வாழ்ந்தோம் என்பதற்காக நமது தலைமுறையும் வாழகூடாது.நமது அரசியல் தலைமைகள் இதுபற்றி அக்கறை செலுத்த வேண்டும்.அறிக்கைகள் கூட்டங்கள்.வருட நினைவுகள் போன்ற வழக்கமான நகர்வுகளை தவிர்த்து காத்திரமான செயல்வடிவம் உள்ள ஒரு நடவடிக்கையை நோக்கி நமது தலைமை நம்மை அழைத்து செல்ல வேண்டும்.நாமும் அவர்களை இதற்கு தூண்ட வேண்டும்.புத்தளம் புத்தள மக்களுக்கே.நமது பூர்வேகம் வடக்கே.

முஸ்லிம்கள் என்ற அடையாளத்தில் நின்று உங்கள் பூமியை அடைய விருப்பம் இல்லை என்றால் போராட்ட குணத்துடன் சொந்த பூமியின் பற்றுடன் வாழும் தமிழர்களுடன் சேர்ந்து தமிழர்கள் என்ற அடையாளத்துடன் அவர்களுக்கு கொடுக்கும் ஓட்டுக்களை கொடுத்து அவர்களிடம் பெறவேண்டியதை பெறுங்கள்.சாதிக்க முடியாத நமக்கு வெறும் முஸ்லிம் என்ற தனி அடையாளத்தைவிட சாதிக்கும் சாதிக்க துடிக்கும் துணியும் தமிழ் அடையாளம் சிறந்தது.

உங்கள் பூர்வீகமானவன்: அஹ்மத் ஜம்ஷாத்

-Mifraz Mohamed-

Post a Comment

0 Comments