Subscribe Us

header ads

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தான் தொடர்ந்து விக்கெட் சரிவு



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்களை இழந்தது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று அடிலெய்டில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் (‘பி’ பிரிவு) பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் இறங்கியுள்ளன. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதல் இந்திய வீரர்கள் நிலைத்து நின்று, இந்திய அணிக்கு ரன்களை குவித்தனர். ஆனால் இறுதியில் இந்திய வீரர்கள் பெரிதும் சொதப்பிவிட்டனர்.  

இந்திய வீரர்கள் கையில் இருந்த ஆட்டம் சற்று பாகிஸ்தானின் பந்துவீச்சு பக்கம் செல்லும் விதமாக இருந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 300 ரன்களை எடுத்தது. இந்திய அணி 320 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 300 ரன்களில் அவுட் ஆகி சுருண்டு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் உலககோப்பையில் இதுவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எடுத்திராத 300 ரன்களை இந்தியா எட்டியது.  பாகிஸ்தான் அணியின் வீரர் சோகில்கான் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ரியாஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சோகில்கான் இறுதி நேரத்தில் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.

இதனையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. பாகிஸ்தான் வீரர் யுனிஸ்கான் 3.2 ஓவர்களில் சமி பந்து வீச்சில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஓரளவு நிலைத்து ஆடினர். அடுத்த விக்கெட் 18வது ஓவரிலே இந்தியாவிற்கு கிடைத்தது. 48 பந்தில் 36 ரன்கள் எடுத்து இருந்த போது ஹாரிஸ் சோகைல், அஷ்வின் வீசிய 18 ஒவரில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தது. அகமது ஷேசாத் 47 ரன்னிலும், சோகைப் மசூத், உமர் அக்மல் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

பாகிஸ்தான் அணி 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தது 106 ரன் களுடன் விளையாடி வருகிறது. உல் ஹக் 9 ரன்களுடனும், அப்ரீடி ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும், முகமது சமி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். 

Post a Comment

0 Comments