Subscribe Us

header ads

பதவி விலகுகிறேன் என மைத்திரிக்கு அறிவித்தேன், பொறுமை காக்க சொன்னார் அவர் - சந்திரிக்கா


எனக்கு நிகரான பதவி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கினால் அந்தப் பதவியில் நான் நீடிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகர்களாக அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும், மஹிந்த ராஜபக்சவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் போசகர் பதவி தொடர்பில்  கட்சி உறுப்பினர்கள் சொன்ன காரணத்தினால் போசகர் பதவி உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் கட்சியில் போசகர் என்றொரு பதவி இருக்கவில்லை.

மஹிந்த சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட போது போசகர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரத்தையும் என்னால் பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்பட்டது.

நான் வெறுமனே இருந்தேன் எனக்கு தேவையென்றால் வழக்குத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸ இழைத்துள்ள அநீதிகள் காரணமாக போசகர் பதவி அவருக்கு வழங்கப்படும் என நான் கருதவில்லை. போசகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னரே எனக்கு இந்த விடயம் தெரியும்.

மஹிந்தவுடன் இணைப் பதவியொன்றை வகிக்க நான் தயாரில்லை, நான் பதவி விலகுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு அறிவித்தேன்.

நாட்டையும் கட்சியையும் அழித்த மஹிந்தவிற்கு போசகர் பதவி வழங்கி அதே பதவியில் நானும் நீடிக்க மாட்டேன்.

கட்சியை விட்டு விலக நினைக்கவில்லை, போசகர் பதவியை துறக்கவே நினைத்தேன். எனினும் கொஞ்சம் பொறுமையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது அதனால் நான் பொறுமை காத்து வருகின்றேன் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

Post a Comment

1 Comments