அஸ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லீம் மாணவிகள் அணியும் ஹிஜாப் அல்லது பர்தா உடையை தடுப்பதற்கு எந்தவொரு அரசாங்க பாடசாலையின் அதிபர்கள் அல்லது ஆசிரியர்களுக்கும் உரிமை கிடையாது.
இந்த உடை முஸ்லீம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாச்சார ஆடைகள். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு.
அதனை அணிய வேண்டாம் என சொலலி தடை விதிப்பதற்கு எந்தவொரு பாடசாலை அதிபருக்கும் உரிமை இல்லை. என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
இன்று பி.பகல் மருதாணை அல்ஹிதாய வித்தியாலயத்தில் இக் கல்லூரியின் பழைய மாணவர் அல்ஹாஜ் எம்.சி பகார்டீன் தனது சொந்த நிதியில் 50 இலட்சம் ருபாவை செலவழித்து கல்லூரியின் கூட்ட மண்டபத்தை மீள நிர்மாணித்து குளிருட்டப்பட்ட ஒரு மண்டபமாக மாற்றியமைத்துள்ளார். கல்வியமைச்சர் அகில காரியவாசம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி ரீ.பி.எம். சாகீர் தலைமையில் நடைபெற்றது. மேல் மாகாணசபை உறுப்பிணர் முஜிபு ரஹ்மானும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சர் உரையாற்றினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஒரு பாடசாலையில் முஸ்லீம் மாணவிகள் இருவர் பாடசாலை சிருடையை அணிந்து வந்து காற்சட்டையை முன் கடவையில் வைத்து கழற்றி தனது புத்தக் பையினுள் வைத்துக்கொண்டு பாடசாலைக்குள் செல்வதை நான் சமுக வலையததளங்களில் கண்டேன். அப்போது இவ்விடயமாக எனது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் நானும் இணைந்து இதற்காக பாராளுமன்றத்தில குரல் கொடுத்தாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
நான் கல்வியமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலாவது மாகாணப் பாடசாலைகளில் அதுவும் மேல்மாகணத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலையான அல் ஹிதாயவுக்கே வருகைதந்துள்ளேன். இக் கல்லூரியின் குறைபாடுகளை மேல்மாகணசபை உறுப்பிணர் முஜிபு ரஹ்மானுடன் கலந்தாலோசித்து உதபுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் 1-5ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆகாரம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் கல்வியமைச்சில் பாடசாலை சீறுடை வழங்குவதில் எவ்வித டென்டர் இல்லாமலும் 5 ஒப்பந்தக்காரர்கள் சீனவில் இறக்குமதிசெய்யப்பட்ட துணிகளை பாடசாலைகளுக்கு வழங்கி பில்லியன் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த டெண்டரை வழங்கும்படி முன்னாள் பொருளாதார அமைச்சர் பணிப்புரையின் கீழ் நடைபெற்று வந்துள்ளது. தற்பொழுது அந்த சீருடை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும்போது அதிபர்கள் ஒரு வருடத்திற்குள் கோடிக்கணக்கில் நிதி சேகரிக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும்
நிறுத்தப்பட்டுள்ளது. என கல்வியமைச்சர் அங்கு தெரிவித்தார்.


0 Comments