Subscribe Us

header ads

நெலும் பொக்குன மாவத்தை பெயர் மாற்றம்!


நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்படவுள்ளது.

பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் பட்ரானியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி 2011ம் ஆண்டு 15ம் திகதி நெலும் பொக்குன மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இலங்கையில் பிறந்த கலை வரலாற்று ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமியின் பெயரை நீக்கி விட்டு நெலும் பொக்குன மாவத்தை என மாற்றி வைத்தமையினால் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆனந்த குமாரசுவாமி ஒரு சிறந்த தத்துவவாதி, காட்சி கலை மற்றும் அழகியற்கலை எழுத்தாளர், இலக்கியம், மற்றும் மொழி துறைகளில் இலங்கைக்கு புகழ் தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments