பிரிவினைவாதிகளின் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குதல் என்ற விடயங்களை விளக்க வைக்கும் பொதுக் கூட்டமொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு நுகேகொடையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, தினேஷ்குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மம்பில ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மைத்திரியின் வெற்றியின் பின்னால், முன்னெடுக்கப்படும் பிரிவினைவாதிகளின் 100 நாள் வேலைத்திட்டத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான அறிவுட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments