எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே
நிறுத்தப்படவேண்டும் எனக் கோரி உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சித்
தலைமைக்கு பரிய அழுத்தத்தை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக
அறியமுடிகிறது. மேல் மாகாண சபை முதல்வர் பிரசன்ன ரணதுங்க திடீரென முன்னணி
மஹிந்த ஆதரவாளராக உருவெடுத்ததன் பின்னணியில் மேல் மாகாணசபை ஆளுங்கட்சி
உறுப்பினர்கள் அணி திரண்டது போன்று பல்வேறு பிரதேசசபை, நகர சபைகள் மற்றும்
மாகாண சபை உறுப்பினர்களிடமும் மீண்டும் மஹிந்த அலை உருவெடுத்துள்ளது.
நேற்றைய தினம் நுகேகொடயில் இடம்பெற்ற
கூட்டம் வெற்றியடைந்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கும்
நிலையில் அனைத்து தரப்பும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து தமது
அழுத்தத்தை வழங்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியே (கட்சித் தலைவர் எனும்
அடிப்படையில்) முடிவெடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால
டிசில்வா ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments