நுகேகொடயில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு 5000 பேர் வந்தால் தான் அரசியலை
விட்டு ஒதுங்குவேன் என தெரிவித்திருந்தமை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு
விட்டதாகவும் தான் அரசியலை விட்டு ஒதுங்க அவசியமில்லையெனவும்
தெரிவித்துள்ளார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி.
கூட்டத்தில் உரையாற்றிய உதய கம்மன்பில,
அசாத் சாலி இராஜினாமா கடிதத்துடன் எங்காவது சன நெரிசலில்
அகப்பட்டுக்கொண்டிருப்பார்.எனவே அவருக்கு வழி விடுங்கள் என்று
தெரிவித்ததோடு அவர் அரசியலை விட்டு ஒதுங்காவிட்டாலும் இனி ஒரு நடைபிணம் என
குறிப்பிட்டிருந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அசாத் சாலி,
தனது சவாலானது விமல் வீரவன்சவை நோக்கியதே என தெரிவித்துள்ளதோடு விமல்
வீரவன்சவால் 5000 பேரைக் கூட்ட முடிந்தால் தான் அரசியலை விட்டு
ஒதுங்குவதாகவே தெரிவித்திருந்ததாக விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தின் போது பல தடவைகள்
அசாத் சாலியின் சவாலை மறைமுகமாகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்
சுட்டிக்காட்டியிருந்ததும் அதற்கு அங்கு கூடியிருந்தோர் பலத்த ஒலி எழுப்பி
ஆரவாராம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments