Subscribe Us

நான் கட்சி மாறவில்லை! ரிஷாத் பதியுதீனே கட்சி மாறினார்!! --ஹிஸ்புல்லாஹ்!

சிரேஷ்ட ஊடகவியளாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பரின் முகபுத்தகதிலிருந்து..



நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் தொலைபேசி ஊடாக நான் கண்ட பேட்டி

நான்:- நீங்கள் இப்போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உள்ளீர்களா?

ஹிஸ்புல்லாஹ்:- யார் சொன்னது நான் இல்லை என்று.... நான் விலகவும் இல்லை... எவரும் விலக்கவும் இல்லை...

நான்:- இல்லை.. இல்லை.. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் மஹிந்த ராஜபக்க்ஷவை ஆதரித்ததன் மூலம் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாக நடந்து கொண்டீர்கள்தானே? அதனால் அதனைக் கேட்டேன்.

ஹிஸ்புல்லாஹ்:- கட்சி கட்சியாகத்தான் இருக்கிறது. அமைச்சர் ரிஷாத் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார். நான் மஹிந்த ராஜபக்க்ஷவை ஆதரித்தேன்.

நான்:- உங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சியல்லவா? இந்த நிலைப்பாடு இன்றும் தொடர்கிறதா?

ஹிஸ்புல்லாஹ்:- நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்தான உள்ளேன். அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தொடர்ந்து தோழமை கொண்டுள்ளேன். நான் பிரிந்து செல்லவில்லை. ஆனால், அமைச்சர் ரிஷாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் அல்லவா சங்கமித்துள்ளார்.

நான்:- அப்படி என்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் கூட்டுக் கட்சிகளின் கூட்டங்களுக்கு சுசில் பிரேம்ஜயந்த் உங்கள் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைத்தானே அழைக்க வேண்டும்.

ஹிஸ்புல்லாஹ்:- இல்லவே... இல்லை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரான சுசில் பிரேம்ஜயந்த் முக்கியமான கூட்டங்களின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற அடிப்படையில் என்னையே அழைக்கிறார் தவிர, அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அல்ல..

நான்:- உங்கள் கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீனினை சந்தித்தீர்களா?
ஹிஸ்புல்லாஹ்:- ஆம் இன்று (10) நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க கிடைத்தது. அவர் ஸலாம் சொன்னார். நான் பதில் ஸலாம் சொன்னேன் அவ்வளவுதான்..

நானும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மீண்டும் ஸலாம் சொல்லி விட்டு தொலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டேன்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Post a Comment

0 Comments