100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு
முழுவதும் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு வீடமைப்பு
சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களது
உதவித்திட்டத்தையும் வேண்டியுள்ளார்.
இதற்கமைவாகவே இத்திட்டத்திற்கு ஜக்கிய
நாடுகள் குடியிருப்பு அமையம் ஊடாக உதவுவதாக இலங்கையில் உள்ள ஜக்கிய நாடுகள்
அலுவலகத்தின் பிரதிநிதி சுபிநெய் நந்தி உறுதியளித்துள்ளார். நேற்று
அமைச்சர் சஜித் பிரேமதாசாவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தபோதே மேற்படி
உறுதியளித்தார்.
ஓவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 330
வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் வீடுகள்
நாடுமுழுவதிலும் நிர்மாணிக்கப்பட உள்ளன. அரசாங்கத்தின் புதிய வீடமைப்புக்
கொள்கைகளயும் ஏற்றுக்கொண்ட ஜக்கிய நாடுகள் பிரதிநிதி முன்னாள் ஜனாதிபதி
ரணசிங்க பிரேமதாசாவினால் ஜக்கிய நாடுகள் அமையத்தில் வீடற்றோர்களுக்கு
வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தி ஜக்கிய நாடுகள் மணித குடியிருப்பு
அமையத்தினை அமைப்பதற்கும் உலக நாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்து
அமுல்படுத்தியதையும் இங்கு அமைசச்ர் விளக்கிக் கூறினார்.
கடந்த 4 தசாப்த காலமாக இலங்கையில் உள்ள
வீடற்ற மக்களுக்காக வீடுகள் அமைக்கும் ஒரே ஒரு அரச நிறுவணமானமாக தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது.
அரசின் பத்து இலட்சம் வீடமைப்புத்
திட்டம் மற்றும் செவன தாபாரிப்போர் வீடமைப்புத் திட்டம் கொழும்பு
மாவட்த்தில் உள்ள தொடர் மாடி வீடமைப்புத்திட்டங்களையும் ஜக்கிய நாடுகள்
பிரதிநிதி கேட்டறிந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய, அமைச்சின் மேலதிகச்
செயலாளர் கே.ஏ.திலக்கரத்தினவும் ஜக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தின்
இணைப்பாளர் ராஜேன்திர குமாரும் கலந்து கொண்டனர்.


0 Comments