Subscribe Us

புதிதாக வந்திறங்கிய விமானத்துக்குப் பூப்புனித நீராட்டு விழா



சீனாவின் தேசிய விமான சேவையான ‘எயார் சைனா’ நிறுவனம், தென்கிழக்கு சீனாவின் செய்சுஆன் மாகாணத்தின் செங்குடு நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மங்களகரமாக ஆரம்பித்துவைத்தது. 

அதன் முதலாவது விமானம் சீ.ஏ. 425 நேற்று 2015.02.10-ம் திகதி இரவு 10.44 க்கு கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. 

இவ் விமானம் இலங்கைக்கு வந்திறங்கியவுடன் புதிய விமானமொன்றை வரவேற்கும் சம்பிரதாயத்திற்கு ஏற்ப விமானத்தின் இருபுறமும் தண்ணீர் வீசி (பண்ணீர் தெளிப்பது போல்) வரவேற்கப்பட்டது. 

துறைமுகம் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்க உட்பட பிரமுகர்களை எயார் சைனா விமான சேவையின் தென்கிழக்குக் கிளையின் பொது முகாமையாளர் காப்டன் லீயூ யொங்கு வரவேற்றார். அமைச்சர் அர்ஜுன ரனதுங்க ரிப்பன் பட்டியை வெட்டி எயார் சைனா விமான சேவையின் இலங்கைக்கான மங்கள வருகையை அடையாளப்படுத்தினார்.

மூலம்: லங்காதீப (சிங்களம்)

நன்றி - The Puttalam Times -



















Post a Comment

0 Comments