வீட்டு மின் மானியில் (Electricity Meter) பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாய் பணம், இரண்டு பவுன் பெறுமதியான தங்கச் சங்கிளி, கைப்பட்டி ஆகியவற்றுடன் இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவரை தம்பகல்லை பொலிசார் கைது செய்தனர்.
ராகலை, தம்பகல்லையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. மின் கட்டணம் செலுத்தத் தவறியதால், மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக வந்த மின்சார சபையின் ஊழியர் ஒருவர் இவ்வாறு பணத்தையும் தங்க ஆபரணங்களையும் திருடியுள்ளார்.
குறித்த வர்த்தகரின் வீட்டில் இதற்கு முன்னர் இரண்டு முறை நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களினால் அச்சங்கொண்ட வர்த்தகர், பணத்தையும் தங்க ஆபரணங்கனளையும் மின் மானியில் பாதுகாப்புக்காக வைத்திருந்தார் என தெரியவருகின்றது.
இந்தளவு பணம் உள்ளவர் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமலிருந்தது ஏன் என்பது புதிராகவுள்ளது.
நன்றி -The Puttalam Times -






0 Comments