முதல்ல உங்க செல்பேசியை விட அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி பாருங்கள்.
நல்ல விசயங்களை மட்டும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் பெற்றோர் தன் நண்பர்களை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள், அதனை முக்கியமாக கவனியுங்கள். அந்த நண்பர்களை சென்று சந்தித்து அவர்களிடம் உங்கள் பெற்றோரின் அருமை பெருமைகளை சொல்லுங்கள்
வீட்டுக்குள் வந்தவுடன் அவர்களைச் சுற்றி அமருங்கள்.
கசப்பான கடந்த காலத்தை அவர்களிடம் பகிர வேண்டாம்.
ஓரே விசயத்தை திரும்பத்திரும்ப அவர்கள் கேட்டாலும், புதிதாக நீங்கள் கூறுவது போல் பாவனை செய்யுங்கள்.
அவர்களின் தவறுகளுக்கும் அறியாமைகளுக்கும் சத்தமாக சிரிப்பதை தவிருங்கள்
எப்பிரச்சினை உங்களுக்கு இருப்பினும் புன்னகையுடன் அவர்களை காணுங்கள்.
அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உங்களுக்கு கடவுளால் அருளப்பட்டது என்பதை மறவாதீர்கள்
இன்றைய பிள்ளைகளாகிய நாம் நாளைய பெற்றோர்கள்
ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்களேன், நம்மில் எத்தனை பேர் பெற்றோரின் பேச்சைப் பொருட்படுத்தாத வாழ்க்கையை வாழுகிறோம் என்று....


0 Comments