Subscribe Us

header ads

சுதநத்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை, விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது


ஸ்ரீலங்கா சுதநத்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை விமல் வீரவன்ச தரப்பு தீர்மானிக்க முடியாது என கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

நுகோகொடை கூட்டம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 விமல் வீரவன்ச உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை தீர்மானிக்க முடியாது. அதற்கான உரிமையோ தகுதியோ கிடையாது.

பிரதமர் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத அளவிற்கு சுதந்திரக் கட்சி வங்குரோத்து அடைந்துவிடவில்லை. பிரதமர் வேட்பாளராக பெயரிடக் கூடிய திறமையான, அனுபவம் மிக்க சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருக்கின்றார்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாம் எமது பிரதமர் வேட்பாளரை அறிமுகம் செய்வோம். முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக போட்டியிட விரும்பினால் அவரும் விண்ணப்பம் ஒன்றை கட்சியிடம் சமர்ப்பிக்க முடியும்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் மத்திய செயற்குழுவினரேயாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து வருகின்றனர் இதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments