ஸ்பெயின் நாட்டின் பிரசித்தி பெற்ற காளை பிடிக்கும் திருவிழாவில், அமெரிக்க
இளைஞர் ஒருவர் காளையால் குத்திப் குதறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் வருடந்தோறும் நடைபெறும் ‘டெல் டோரோ’ என்ற காளை பிடிக்கும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
சமீபத்தில் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான, காளை பிடிக்கும் விளையாட்டை கண்டுகளிக்க உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ரோட்ரிகோ நகரில் குவிந்தனர்.
இவர்களில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த பெஞ்சமின் மில்லர் (வயது 20) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் நேற்று காளை பிடிக்கும் திருவிழாவிற்கு வந்துள்ளார்.
விழா தொடங்கியதும் சீறிப்பாய்ந்த காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக திடலுக்குள் திமிறிக்கொண்டு ஓடி வந்தன. அப்போது திடீரென ஒரு காளை பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து அங்கே நின்றுகொண்டிருந்த மில்லரை தாக்கத் தொடங்கியது.
மில்லரின் ஆடையைக் கிழித்து அவரது தொடையில் தன் கொம்பைச் செறுகியது. தொடையைக் கிழித்தவாறே அவரை நெடுந்தூரம் தூக்கி சென்று வீசியது. மரண பயத்தால் அலறிய மில்லரை காளை விடாமல் தாக்கியது. காளையிடமிருந்து தப்பிக்க மில்லர் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. வெறி பிடித்ததைப்போல் மில்லரை துரத்தித் துரத்தி தாக்கியது.
சில நிமிட போராட்டங்களுக்கு பிறகு மில்லரின் நண்பர்கள் காளையின் வாலை பிடித்து இழுத்து மில்லரை காளையிடமிருந்து மீட்டு, அருகில் இருந்த சலமன்கா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மில்லரைப் பரிசோதித்த மருத்துவர் மில்லரின் தொடையில் சுமார் 40 செ.மீ அளவிற்கு ஆழமாக காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் மில்லருக்கு சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. என் வாழ்நாளில் காளை முட்டியதால் இவ்வளவு ஆழமான காயம் ஏற்பட்டதை நான் பார்த்ததில்லை என்று மருத்துவர் தெரிவித்தார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மில்லர் மெல்ல குணமடைந்து வருகிறார்.
அபாயம் என்று தெரிந்தும் சர்வதேச பார்வையாளர்களை கவர ஒவ்வொரு வருடமும் இந்த காளைச்சண்டைத் திருவிழா நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது.

0 Comments