Subscribe Us

header ads

மன்னாரில் எரிவாயு மட்டுமல்ல கனிய எண்ணெய் வளமும் உள்ளது: பாலித்த ரங்கே பண்டார



மன்னாரில் நடத்திய அகழ்வாராய்ச்சிகளின் மூலம் எரிவாயு மட்டுமின்றி கனிய எண்ணெய் வளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த திட்டத்திற்கு அவசியமான பண வசதிகள் இல்லை என்பதனால் அதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களை தேடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே நிரந்தர அரசியல் சூழல் ஒன்று முதலீட்டிற்காக எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் ஐந்து மாதங்களுக்குள் நாட்டில் நிரந்தர அரசியல் சூழல் உருவாகும் என்பதனால் குறித்த திட்டத்திற்கு சட்டரீதியான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments