Subscribe Us

header ads

மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம்




உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (18) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக, நேற்றிரவு டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட அவர் தனது மனைவி ஜெயந்தியுடன் இன்று அதிகாலை திருப்பதி சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறீசேன அவரது மனைவி ஜெயந்தியுடன், நான்கு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா சென்றனர். இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சிறிசேன மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

Post a Comment

0 Comments