கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட லபுக்கலை தோட்ட அதிகாரியினால் ஊடகவியளாளர் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இருவரும் செய்தி சேகரிக்க சென்று திரும்பிக் கொண்டிருந்த வாகனத்தை மறித்து அச்சுருத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஊடகவியளாளர்கள் மேற்படி தோட்ட பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பாதையின் அருகே பாரிய அளவில் குப்பைகள் காணப்பட்டன.
அந்த குப்பைகள் தோட்ட மக்களின் குடியிருப்பு தொகுதிக்கு அருகாமையில் காணப்பட்ட அதேநேரம், துர்நாற்றம் வீசியது. நாய்கள், பறவைகள் குப்பைகளை அங்கும் இங்குமாக இழுத்து சென்றுக் கொண்டிருந்தன.
டெங்கு நுளம்பு உருவாவதற்கு காரணமாக இருக்கும் போத்தல்கள் பாரிய அளவில் காணப்பட்டன. மலக் கழிவுகள் உட்பட ஏனைய கழிவுகளும் காணப்பட்டன.
கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வரும் பிரதான வாவியின் அருகே இக் குப்பைகள் போடப்பட்டிருந்தன.
குறித்த நீரை பள்ளத்தாக்கு பிரதேசங்களில் விவசாயத்திற்கு மக்கள் பாவித்து வருகின்றனர். இந்த குப்பைகளினால் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதனை கண்ட ஊடகவியளார்கள் செய்திகளை சேகரித்தனர் பின் இதன் உண்மை தன்மையை தோட்ட அதிகாரி மூலம் உறுதிபடுத்திக் கொள்ள தோட்ட அதிகாரியின் காரியாலயத்திற்கு சென்றனர்.
அப்போது, அத் தோட்டத்தின் தோட்ட அதிகாரி, உத்தியோகஸ்த்தர்கள் உட்பட சில ஊழியர்கள் ஊடகவியளாலர்கள் சென்ற வாகனத்தை தோட்ட அதிகாரியின் வாகனத்தால் மறித்து அச்சுறுத்தியுள்ளதாக, தெரிகிறது.
ஒருவாறாக ஊடகவிளாளர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேரினர்.
தற்போது இது தொடர்பான முறைபாடு ஒன்று ஊடகவியளாளர்களினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.-அத தெரண-

0 Comments