Subscribe Us

header ads

கருப்பைக்கு வெளியில் வளர்ந்த சிசு – குருனாகல் வைத்தியசாலையில்

 
கர்ப்பத்திற்கு வெளியில் வளர்ந்த சிசுவொன்றை Ectopic Pregnancy சீசரியன் சத்திர சிகிச்சை மூலம் பாதுகாப்பாகப் பிரசவித்த மருத்துவ ஆச்சர்யம் கடந்த 27-ம் திகதி குருனாகல் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. குருனாகல், தொம்பகொல்லையைச் சேர்ந்த செயற்றிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தராக தொழில்புரியும் பீ.எம். புஷ்பா குமாரி நவரத்ன, வயது 31, முதலாவது பிரசவத்தின் கரு (ஆண்) கர்ப்பத்திற்கு வெளியில் வளர்ந்திருந்தது. இவ் அசாதாரண சீசரியன் சத்திர சிகிச்சையை பெண்ணியல் நிபுணர் வைத்தியர் எஸ்.பீ. ஏகநாயக்க வெற்றிகரமாக மேற்கொண்டார். இக் குழந்தைக்கு நுவங்க தானுஜ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

மிக அபூர்வமாக நடைபெறும் கர்ப்பத்திற்கு வெளியில் கரு வளர்ச்சி பற்றிய தகவல்கள் சில நாடுகளில் பதிவாகியிருந்தாலும் இலங்கையில் பதிவான முதலாவது சம்பவம் இதுவென கருதப்படுகின்றது.

இவ் அசாதாரண கரு வளரச்சி பற்றிய முக்கியமான சில தகவல்களை வைத்தியர் ஏகநாயக்க குறிப்பிட்டுகின்றார்:

*||* இவ்வாறான கரு வளர்ச்சியை முன்கூட்டி அறிந்துகொள்ள முடியும். கர்ப்பம் தரித்து 12 வாரங்களுக்கு முன்னர் ஸ்கேனிங் செய்து பார்த்தால், கருப்பை வேறாகவும் கரு வேறாகவும் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், சாதாரணமாக கர்ப்பக் காலத்தில் 16-ம் வாரத்தில் இருந்துதான் ஸ்கேனிங் செய்யப்படுகின்றது. முதல் மூன்று மாதங்களும் (12 வரங்கள்) குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர் (மிட் வைப்) இடமிருந்து ஃபோலிக் அமிலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதன்போது கரு வளர்ந்திருக்கும். அச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான அமைவொன்றைக் இனங்காணுவது கடினமாகி விடுகின்று.

*||* பெலோபீன் குழாயின் உள்ளே கருவொன்று வளர்ந்தால் குழாய் வெடித்துவிடும். இரைப்பையில் வளரும் சாத்தியம் உள்ளது. கருவென்பது தாயின் உடம்பில் வளரும் ஒட்டுண்ணி போன்றது. அவை எந்தவிடத்தில் அப்பிக்கொண்டிருந்தாலும் அதில் இருந்து இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும். உணவைப் பெற்றுக்கொள்ளும். இதன் காரணமாக தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

*||* எமது நாட்டில் பதிவான முதலாவது பிரசவம் இதுவானாலும், 2007-ம் வருடம் நைஜீரியாவில் இவ்வாறான பிரசவம் ஒன்று நடைபெற்றுள்ளது. எனது மருத்துவ வரலாற்றில் அனுபவித்த முதலாவது அதிசயம் இந்தப் பிரசவம்தான்.

*||* கர்ப்பத்துக்கு வெளியே கரு வளருவதற்கு முக்கியமான காரணம், வறுமை. வறுமையின் காரணமாக கர்ப்பிணித் தாய்க்குப் போதுமான அளவு அனீமியா மற்றும் புரதம் கிடைக்காதபோது, பற்றாக்குறை ஏற்படும் போது, இவ்வாறான கோளாறுகள் தோன்றுகின்றது. இந் நிலையை ஆசிய மண்டல நாடுகளில் அதிகம் காணலாம்.

மூலம்: அத (சிங்கள ஊடகம்)
(மேலதிக ஒளிப்படங்ளைப் பார்வையிட கீழ் இணைப்பைத் திறக்கவும்...
http://www.ada.lk/article/28771/කුරුණෑගල-රෝහලෙන්-දුර්ලභ-දරු-ප්‍රසූතියක්

Post a Comment

0 Comments