Subscribe Us

header ads

பார்க்க சென்ற சகோதரரை சீக்கிரமாக செல்லுமாறு கூறிய ஜனாதிபதி!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அவரது சகோதரரான டட்லி சிறிசேன கடந்த வாரத்தில் ஒரு நாள் கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார்.

இது குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி, செயலகத்திற்கு வந்ததன் காரணம் என்ன என சகோதரரிடம் வினவியுள்ளார்.

சும்மா பார்த்து விட்டு போக வந்ததாக டட்லி சிறிசேன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

பார்த்து விட்டு போக வந்தது நல்லதுதான் என கூறிய ஜனாதிபதி, என்னை பார்த்தாகி விட்டதுதானே சீக்கிரமாக செல்லுங்கள் என தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் சகோதரர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Post a Comment

0 Comments