சிக்ஸ்பேக் உடம்புக்காரர்கள் கூட இந்த வாய்ப்புண்ணிடம் இருந்து தப்பிக்க முடியாது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல வாயில் சின்னதாக ஒரு புண் இருந்தால் கூட போச்சு. சரியாக சாப்பிட முடியாது. கோப்பியோ, டீயோ சூடாகக் குடிக்க முடியாது. தீராத நமைச்சலும் வலியும் குத்தலும் வாயில் இருந்து கொண்டு நம்மை பாடாய்ப்படுத்தும்.
வெறும் வாய்ப்புண்தானே என்று அலட்சியப்படுத்தினால் அது வாய் புற்றுநோயாக கூட மாறலாம்’’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் பொது மருத்துவர் ஐ.கலைமதி. வாய்ப்புண்கள் வருவதற்கான காரணங்களையும், அதற்குரிய தீர்வுகளையும் குறித்து நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...‘‘வாய்ப்புண்ணை ‘மவுத் அல்சர்’ என்று குறிப்பிடுவோம். இதில் மைனர் அல்சர், மேஜர் அல்சர், ஹெர்பெடிக் அல்சர் என 3 வகைகள் உள்ளன. பொதுவாக வரும் வாய்ப்புண்களில் 80 சதவீதம் மைனர் அல்சர் வகைதான். ஹெர்பெடிக் அல்சர், ஹெர்பஸ் (Herpes) எனும் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது.
வாய்ப்புண்களின் சுற்றளவு ஒரு மில்லி மீட்டரில் இருந்து அதிகபட்சம் 10 மில்லி மீட்டர் வரை மட்டுமே இருக்கும். சிறிய வாய்ப்புண்கள் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். பெரிய புண்கள் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் ஆறிவிடும். சாதாரண வாய்ப்புண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில், சிறுகுழியாக காணப்படும்.
சிலருக்கு சாம்பல் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும். ஹெர்பஸ் வைரஸ் தாக்குத லால் வரும் வாய்ப்புண்கள், முதலில் கொப்புளமாக ஏற்பட்டு, பிறகு உடைந்து சாதாரண வாய்ப்புண்ணாக மாறும். பொதுவாக வாய்ப்புண் கன்னத்தின் உள்பக்க ஓரங்களிலும், உதட்டின் உள்பக்கமும் வரும். ஒரு வாரத்துக்கு மேல் வாயில் இருக்கும் புண்கள் ஆறாமல் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது. வேறு நோய் தாக்குதலால் கூட வாய்ப்புண்கள் ஆறாமல் இருக்கலாம்.
சில பேருக்கு பற்கள் கூர்மையாக இருக் கும். இவர்கள் சாப்பிடும் போது தெரியா மல் உள் அண்ணத்தையோ, உள் உதட்டை யோ கடித்துவிடுவார்கள். இதனால்கூட வாய்ப்புண்கள் உருவாகி சில நாட்கள் நீடிக் கும். உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுச் சத்துகள் குறைந்தாலும், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் போலிக் அமிலம் போதுமான அளவில் இல்லாவிட்டாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதவர்களுக்கும் கூட வாயில் புண் உருவாகும். கேஸ்ட்ரைட் டிஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு, வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பதால் வாயில் புண்கள் வரும். சில நேரங்களில் மன உளை ச்சல் கூட வாய்ப்புண் வரக் காரணமாக இருக்கும்.
பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை மெல்பவர்களுக்கும் வாய்ப்புண் வரும். இந்த புண்களின் நிறம் வழக்கத்துக்கு மாறாக இருக்கும். ஆறாத புண்ணாக மாறிவிடும். இதற்கு ‘க்ரோனிக் அன்ஹீல்டு அல்சர்’ என்று பெயர். புகையிலை மெல்பவர்களுக்கு ‘லுக்கோப்ளேக்கியா’ என்ற பிரச்சினையும் ஏற்படும். இவர்களுக்கு ஈறுகளில் வெள்ளையாக மாவு போல பிளேக்குகள் படிந்து இருக்கும். ஈறுகளில் அரிப்பு இருக்கும். காலப்போக்கில் கேன்சராகவும் மாறிவிடும். புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் அதை நிறுத்திவிடுவதே நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகள் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத் தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அதனா லும் வாய்ப்புண்கள் ஏற்படும். இதற்கு ‘மவுத் ஸ்ட்ரெஸ் அல்சர்’ என்று பெயர்.
சிலர் செயற்கை பற்களை பயன்படுத்துவார்கள். அதை சுத்தம் செய்ய ‘டென்டல் டிங்சர்’ திரவத்தை பயன்படுத்துவார்கள். இந்த டிங்சர் அலர்ஜியாகி சிலருக்கு புண்கள் ஏற்படும். உணவு ஒவ்வாமை ஏற்பட்டாலும், குடலில் கிருமித்தொற்று இருந்தாலும் வர லாம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் ஏற்படும்.
அதிக வலி அல்லது புண் வழக்கத்துக்கு மாறான நிறத்தில் காணப்பட்டால், காலம் கடத்தாமல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது’’ என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கலைமதி.
வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
* மவுத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிக்க வேண்டும்.
* சூடான, காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* விட்டமின் குறைபாட்டால் வாய்ப்புண் வந்திருந்தால் விட்டமின் பி காம்ப் ளெக்ஸ் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* புண்களில் வலி ஏற்பட்டால் அதற்குரிய ஆயின்மென்ட்டை புண்ணில் தடவலாம்.
* ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இரும்புச்சத்து, தாதுச்சத்து கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
* புகையிலைப் பொருட்களை பயன்படுத் தக் கூடாது.
* மதுப்பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.
* சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும்.
வேலையினால் ஏற்படும் மன அழுத்தத் தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.


0 Comments