Subscribe Us

சவூதியில் இலங்கையர் மூவருக்கு மரணதண்டனை: மன்னிப்பு வழங்கவும்: ஜனாதிபதி கோரல்


சவுதியரேபியாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பவுள்ளார்.

யெமன் நாட்டு பிரஜையொருவரை தாக்கி அவர் மரணத்துக்கு காரணமாகவிருந்ததோடு கொள்ளையிலும் ஈடுப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணதண்டனையை சவூதியரேபிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை மறுதினம் சவூதியரேபியாவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.

இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறித்த கடிதத்தை சவூதி அரசரை நேரடியாக சந்தித்து வழங்கவுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments