Subscribe Us

header ads

மகிந்தவிற்கு நன்றாக கண் தெரியும், பசிலுக்கு காதுகள் நன்றாக கேட்கும் - மேர்வின் சில்வா


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அவருடைய தம்பி அமைச்சர் பசிலிடம் பலவீனமாக இருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றாக கண் தெரியும். பசில் செய்த தவறுகளை அவர் நன்றாக கவனித்தார்.

மகிந்த, பசில் செய்த தவறுகளை எங்களிடம் சுட்டிக்காட்டி அவருக்கும் அறிவுரைகள் வழங்கினார். பசிலுக்கும் காதுகள் நன்றாக கேட்கும், எனினும் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு பசிலினால்  முடியவில்லை காரணம் தம்பியிடம், அண்ணன் மகிந்த பலவீனமாக இருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments