Subscribe Us

header ads

சிங்களவர்கள் இனவாதத்தை கைவிட வேண்டும் - ராஜித


சிங்களவர்கள் சிங்கள இனவாத்தை தவிர்க்க வேண்டுமென அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் இனம் இனவாதத்தை தூண்டினால் அதனை பார்த்துக் கொண்டிருக்கும் இன சமூகங்களும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள், சிங்கள இனவாதத்தை கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தால் தமிழ் இனவாதமும் நிறுத்தப்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட கூடிய சாத்தியம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments