Subscribe Us

header ads

இவரை விட யார் முதலமைச்சருக்குத் தகுதியானவர் ? இதை விட என்ன தகுதி வேண்டும் ?



இவரை விட யார் முதலமைச்சருக்குத் தகுதியானவர் ? இதை விட என்ன தகுதி வேண்டும் ? இவரினை கட்சி நிராகரிக்குமாக இருந்தால் கட்சியே அம்பாறை மக்களால் நிராகரிக்கப்படும்...!!

இன்னும் சில மணி நேரங்களில் மு.கா இனுடைய தேசியத் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக யாரை நியமிக்கப் போகிறார் என்ற மர்ம முடிச்சை அவிழ்க்கப் போகிறார்.இதில் அம்பாரை மாவட்டத்தில் மு.கா குழுத்தலைவர் ஏ.எம் ஜெமீலிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப் பட வேண்டும் என்ற கருத்து நாளுக்கு நாள் மக்களிடையே வலுத்து வருவது நாம் அறிந்ததே!ஏன் இவரை நியமிக்கக் மக்கள் கோருகிறார்கள் ? என்ற மக்கள் கூற்றிற்கான நியாயங்களினை அவரைப் பற்றி முற்று முழுதாக அறிகின்ற போது பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.கல்வியில் மாத்திரம் அல்ல அரசியலில் மாத்திரம் அல்ல சமூக சேவையில் மாத்திரம் அல்ல அதையும் தாண்டி ஒரு படி மேல் சென்று சர்வதேசத் தொடர்புகளிலும் இவர் மிளிர்ந்தே காணப்படுகிறார்.இப்படி பல் ஆளுமை கொண்ட ஒருவரை நியமிக்கும் போதே முதலமைச்சர்ப் பதவியினை சரியான விதத்தில் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதனை யாவரும் ஏற்பர்.

கல்வித் தகமை

• வியாபார முகாமைத்துவத் துறையில் மனித வள முகாமைத்துவத்தில் (HRM) விசேட முதுமாணிப் பட்டம்(M.BA)

•வர்த்தகத் துறையில் சந்தைப்படுத்துதல் முகாமைத்துவத்தில் விசேட பட்டம் (B.Com),தென் கிழக்கு பல்கலைக் கழகம்

• சமாதானத் துறையில் விசேட டிப்ளோமா பட்டம் 

• நிலையான பொருளாதார அபிவிருத்தியில் டிப்ளோமா பட்டம் 


சாதனைகளும் கௌரவங்களும்

•உலக சமாதான ஸ்தாபனத்திற்கான தூதுவர்.

• 1991 ல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஜனாதிபதி சாரணர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்..

• 2000 ல் தென் கிழக்கு பலகலைக் கழகத்தில் இரண்டாம் தரத்தில் (Second Class) பட்டம் பெற்றார்.

• கனடா Chartered Business நிர்வாகியாக உள்ளார். 

சர்வதேசத் தொடர்புகள்

• 1992-Youth Leadership Training programme, International Islamic University of Islamabad, Pakistan.

• 1994- International Federation of Islamic Students’ Organization (IIFSO)

• 2001- World Youth Conference of World Assembly of Muslim Youth (WAMY), Riyadh, KSA.

• 2002- Peace Conference on Sri Lanka, Munich, German

• 2004- Conference on Peace and Development Study, University of Jaume, Spain.

• 2004- Seminar at University of Metropolitan, London

• 2005- World Youth Conference of World Assembly of Muslim Youth (WAMY), Riyadh, KSA.

• 2006- World Youth Conference of World Assembly of Muslim Youth (WAMY), Riyadh, KSA.

• 2007- Residential Workshop organized by youth Council of Malaysia.

• 2008 – International Leadership Workshop organized by Islamic Students’ Organization (IIFSO)

• 2009 – Workshop on sustainable urban development, Korea organized by KOICA.

• 2008 & 2009-Duniya Malau Duniya Islam (DMDI) annual conference, Malaysia. 

• 2010- International Youth Conference in South Africa.

• 2011- International Conference on rights of Palestinian community, Iran.

• 2012-Residential Workshop on Sustainable development of Local Authority organized by KILA, India.

• 2012-Official delegation on the tour of Ministry of justice to Kuwait and Qatar along with Minister of Justice and Leader of SLMC.

• 2012 & 2013- Represented Sri Lanka at UMNO conference, ruling party of Malaysia.

• 2014- Attended MOU signing ceremony between Sri Lanka Muslim Congress (SLMC) and 
UMNO Malaysia held in Malaysia.

அரசியல் ரீதியான பதவிகள்

• இரு முறை மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார் (2008,2012)

• தற்போது மு.கா குழுத்தலைவராக உள்ளார்.

• 2006,2008 இல் கல்முனை மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

• 2006 ல் இருந்து மு.கா தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

• அம்பாறை மாவட்ட இளைஞ்ஞர் அமைப்பாளர்.

• மு.கா சர்வேதேச தொழில் வழி காட்டல் பிரதிப் பணிப்பாளர்.

• ஊர் அபிவிருத்திக் குழு, மத்திய குழுச் செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு.

சமூக சேவைகளிற்கான பங்களிப்பும் அதன் மூலம் சாதித்தவைகளும்

• 2012 ல் “Leader Ashraff Education Foundation” அமைப்பை உருவாக்கினார்.

•2004 ல் College of Management and Technology (COMTECH) எனும் கல்வி நிறுவனத்தை தனது முயற்சியினால் மக்களுக்காக நிறுவினார்.

• சாதாரண பட்டதாரியாக இருந்து கொண்டு தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முக்கிய கதா பாத்திரம் வகித்தார்.உபவேந்தராக இருந்த Pro. M.L.A Cader ,மறைந்த தலைவர் அஷ்ரப் ஆகியோரோடு கலந்துரையாடி முக்கிய முடிவுகளினை எடுத்து சாதனையும் புரிந்தார்.

• தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவத் தலைவராக இருந்த போது உபவேந்தரின் பூரண வழி காட்டலோடு சம்மாந்துறையில் விஞ்ஞானப் பிரிவை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.

• 5000 இற்கும் மேற்பட்ட ஓ.எல்,ஏ.எல்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியினைத் தொடர உதவி உள்ளார்.

• சாதாரண பட்டதாரியாக இருந்து கொண்டு national university இனை நிறுவுவதில் மத்திய அமைச்சர்களுக்கு முன் மாதிரியாக நின்று உழைத்தார்.

• சுனாமி இலங்கையின் கரையோர மாவட்டங்களைத் தாக்கிய வேளை நடமாடும் உணவு விநியோகங்களைச் செய்தார்.பாதிக்கப் பட்ட இடங்களினை மீள சுத்தம் செய்து கொடுத்தார்,ஆலோசனைகளை வழங்கினார், தற்காலிக குடிசைகளை அமைப்பதில் உதவினார்,மருத்துவ உதவிகள்,சுய தொழில் வாய்ப்பு என ஆயிரம் ஆயிரம் உதவிகளினைச் செய்தார்.

•சாய்ந்தமருது Health Care Centre இற்கு மின்சாரம்,நீர் வசதி,ஏனைய வசதிகளினையும் செய்து கொடுத்தார்.பள்ளிவாயல் கட்டுவதற்குரிய உதவியாளர்களையும் அறிமுகப்படுத்தியும் உதவிகளினைச் செய்தும் ஆரம்பித்து வைத்தார்.
 

• 1991,1992 இளைஞ்சர் கலகங்களை இயக்கினார்.

• தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவத் தலைவரை உருவாக்கினார். 

• கொழும்பில் SEUSL மாணவர்களுக்காக specialization programme இனை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்தார்.

•தொழில் நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும்,உதவிகளையும்,பல்கலைக் கழகத்திற்கு தேவையான உதவிகளினையும் செய்து கொடுப்பதில் முன்னோடியாக இருந்தார்.

• 1988 – 1990, தலைவர் , கல்முனைக் கிளை –Sri Lanka Muslim Students’ Federation (SLMSF).

• 1991 – 1992, தலைவர்,கிழக்கு கல்வி வலயம், Sri Lanka Muslim Students’ Federation (SLMSF).

• 1993-1994, தலைவர், கிழக்கு , SLMSF

• 1995-1996, துணைச் செயலாளர், SLMSF.

• 1997-1999, பொதுச் செயலாளார், SLMSF.

• 2000- to date, செயலாளர்,அமைப்பாளர் – Sri Lanka Muslim Youth Federation.

• 2002- Organized Peace workshops with the participation of various civil and religious 
Organizations/movements representing Tamil, Muslim and Sinhala communities through 
Sri Lanka Muslim Youth Federation (SLMYF).

• After the smooth functioning of the South Eastern University of Sri Lanka (SEUSL) his contribution to commence the specialization programmes for the undergraduates especially based in Colombo parallel to university of Sri Jayawardenapura, university of Colombo etc. was remarkable. This can be witnessed by the undergraduates who are in higher positions and high paid jobs.

• Worked closely with Late Minister Hon. Dr. M H M.Ashraff - Leader of SLMC, UGC Chairman, Founder Vice Chancellor (SEUSL) and other stakeholders in the inception of the SEUSL.

• Initiated many linkage programs between SEUSL and local as well as reputed foreign Universities whilst contributing in enhancing University infrastructure throughout the years.

• 2004-Being the founder and Director General of College of Management & Technology (COMTECH) Sainthamaruthu various skills development programmes for the betterment of youths, Diploma programs and external degree programmes of the South Eastern University of Sri Lanka (SEUSL) have been in existence since 2004. The number of beneficiaries is higher. COMTECH programmes are taken forward under the guidance of Pro. M.L.A Cader as the rector. 


இதை விட என்ன வேண்டும்? இவரை விட யார் தகுதியானவர்?.எனவே,அனைத்துத் தகுதிகளும் உள்ள இவரினை கட்சி நிராகரிக்குமாக இருந்தால் கட்சி தான் மக்களால் நிராகரிக்கப் படும் என்பதனைப் புரிந்து முதலமைச்சர் விடயத்தில் நல்லா முடிவுகளை எடுக்க வேண்டும் என மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை 
இலங்கை.

Post a Comment

0 Comments