Subscribe Us

header ads

திஸ்ஸவை தொடர்ந்து கைதாக உள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்


போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பாக கைதாகியுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்தகுமார விதானகே தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஒரு வாரத்தினுள் முடிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பின் பிரபல அரசியல்வாதி (பாராளுமன்ற உறுப்பினர்) ஒருவரின் பெயர் உட்பட தொடர்புடைய 30 பேரின் விபரங்களை வெலே சுதா வெளியிட்டுள்ளதுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் போதைவஸ்து ஒழிப்புப் பிரிவு (நாகொடிக்) கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கு பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் உத்தரவிட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெலே சுதா ஏற்கனவே கொழும்பு மாவட்ட எம்.பி. ஒருவரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஏன் இன்னும் அவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்படவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது.
பெயரை வெளியிட்டார் என்பதற்காக அவரை கைது செய்ய முடியாது. கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாலும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார்.
அவ்வாறில்லாமல் வெலே சுதாவினால் வெளியிடப்படும் அனைத்து நபர்கள் தொடர்பாகவும் பெறப்படும் தகவல்கள் திரட்டப்பட்டு குற்றவாளியென நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டே கைதுசெய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

0 Comments