Subscribe Us

header ads

கற்பிட்டி புதிய நீதிமன்ற வளாகம் நாளை திறக்கப்பட உள்ளது.


கற்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக்கட்டிடம் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். கற்பிட்டியில் இவ்வளவு காலமும் தற்காலிகமான பிரதேசம் ஒன்றிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதி அமைசச்ர் ரவூப் ஹக்கீம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாகவே இவ் நிரந்தரக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments